Saturday 11 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 211 - சந்திர மகாதிசை, புதன் புத்திப் பலன்கள்


பாளில்லா சந்திரன் திசை புதனின் புத்தி
பகரும் நாள் மாதமது பதினேழாமே
கோளில்லா அதன் பலத்தை கூற்ந்துகொள்வோம்
குணமுள்ள மாதர்களும் மனமகிழ்ச்சியுண்டாம்
நாளில்லா கலியாணம் நடக்கும் பாரு
நன்றானபாக்கியமும் நவதானியஞ்சேரும்
தேளில்லா சத்துருவை செயிக்கலாகும்
தெரிவையர்கள் மோகமுடன் தெளிந்துநிற்பான்


மேலும் வேறுபாடில்லாத சந்திர திசையில் புதனின் பொசிப்புக்காலம் 17 மாதங்களேயாகும். அந்தக் கிரகத்தின் பலன்களை நன்கு அறிந்து கூறுவாயாக! ஏனெனில் குணமுள்ள மாதர்களால் அச்சாதகனுக்கு மனமகிழ்ச்சியுண்டாகும். திடுமென்று திருமணம் நிகழ்தலும் உண்டு. நிறைந்த பாக்கியங்களும் நிகழும். நவதானிய வகைகள் சேரும். தேனிலுள்ள வாசத்தைக் கலக்கும் வண்டென இச்சாதனைகளைத் தெரிவையர்கள் என்ற வயதான மங்கையர்கள் தெளிந்து நிற்பார்கள் என்று போகரது கருணையால் புலிப்பாணி பாடினேன்.

இப்பாடலில் சந்திர மகாதிசையில் புதன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment