Monday 6 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 117


பாரப்பா யின்னமொரு புதுமைகேளு
பால்மதியும் பரமகுரு யேழில் நிற்க
சீரப்பா ஜென்மனுக்கு வேட்டலில்லை
செந்திருமால் தேவியுமோ விலகி நிற்பாள்
கூறப்பா குமரியவளில்லாமல்தான்
குமரனுட வங்கிஷமும் நாசமாச்சு
ஆரப்பா அயன்விதியை கூறலுற்றேன்
அப்பனே புலிப்பாணி பாடினேனே


இன்னுமொரு புதுமையையும் நீ கேட்பாயாக! எல்லாராலும் புகழப்படும் குருவும் மதியும், ஏழாம் இடத்தில் நிற்கப் பிறந்த சாதகனுக்கு தன்னளவில் விருப்பமின்றி இருப்பான். எனினும் செந்திருமால் தன் தேவியுடன் அவனை விலகியே நிற்பான். ஆதலின் மனைவி மக்கள் இன்றி அக்குமரனது வம்சம் நாசமாகும்பிரமன் எழுதிய விதியை யாரால் மாற்ற இயலும்? இதனையும் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment