Friday 24 August 2012

Lagna in Tamil : லக்னமும் முக அழகும்



ஜாதக அமைப்புகளில் 12 வகையான லக்னங்கள் உள்ளன. ஒருவரது லக்னாதிபதி மற்றும் அவரது லக்கினதோடு சம்பந்தம் பெறுகிற கிரங்களை பொறுத்தே ஒருவரது முக அழகு அமைகிறது.

  • லக்கினதுடன் சுக்கிரன் சம்பந்தம் பட்டு இருந்தால் அவர் நல்ல வெள்ளை நிறமாகஇருப்பர். கவர்ச்சி பொருந்திய முக அமைப்பை பெற்று இருப்பர்.
  • லக்கினதுடன் சனி சம்பந்தம் பட்டு இருந்தால் கருப்பு நிறம் உடையவராக இருப்பார். சனி சுக்கிரன் ஆகிய இரண்டுமே சம்பந்தம் பெற்று இருந்தால் கருப்பாக இருந்தாலும் களை ஆக இருப்பார்கள்
  • லக்கினதுடன் புதன் சம்பந்த பட்டு இருந்தால் அறிவு களை உடைய முகமாக இருக்கும்
  • லக்கினதுடன் சூரியன் சம்பந்தம் பட்டு இருந்தால் தேஜஸ் மற்றும் ஆளுமை நிறைந்த கம்பீரமான முக தோற்றத்துடன் விளனகுவர்கள்
  • லக்கினதுடன் சந்திரன் சம்பந்தம் பட்டு இருந்தால் குளிர்ச்சியான முகம் அமைய பெற்று இருப்பார்கள். வசீகர உடையவர்கள்
  • லக்கினதுடன் குரு சம்பந்தம் பெற்று இருந்தால் பணிவான முகம் உடைய ஆண்களாகவும் மாசு மறுவற்ற குடும்ப பாங்கான அழகு உடைய பெண்களக திகழ்வார்கள்
  • லக்கினதுடன் செவ்வாய் சம்பந்தம் பட்டு இருந்தால் நல்ல சிவப்பான நிறம் உடைய்வர்கலகவும் கண்டிப்பு நிறைந்த பார்வை உடையவர்களாகவும் இருப்பார்கள்
  • லக்கினதுடன் ராகு சம்பந்தம் பட்டு இருந்தால் ஒழுங்கற்ற பல்வரிசை அல்லது பெரிய மூக்கு என்று ஏதேனும் குறையான முக அமைப்பை பெற்று இருப்பார்கள்
  • லக்கினதுடன் கேது சம்பந்தம் பெற்று இருந்தால் ஒரு துறவி போன்ற எளிமையான முக அமைப்பை பெற்று இருப்பார்கள்

No comments:

Post a Comment