Saturday 4 August 2012

I இல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்? (முழு கணிப்பு)


‘I’யில் பெயர் துவங்குவோர் மனோதிடம் கொண்டவர். தெளிவான சிந்தனை உடையவர். தோல்விகளைத் துச்சமாக மதிப்பவர். கடின உழைப்பும் காந்த சக்தியுடைய கண்களும் கொண்டவர். அரசாங்க, அரசியல் செல்வாக்கும் நாநயமும் உள்ளவர்.

இந்த எழுத்தில், கதிரவனின் கதிர்கள் பட்டு, இடமும் வலமும் சிதறுவதால், உறுதியும் குழப்பமும் சம அளவில் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அனைவரையும் அரவணைத்துச் செல்லும் குணம் இருக்கும். இவர்களுக்கு அரசியல் பண்ணுவது மிகவும் பிடித்த சமாச்சாரம். அதிகாரம் செலுத்துவதில் மிக முனைப்பாக இருப்பர். யூகத்தின் அடிப்படையில் காரியமாற்றி வெற்றியடைவர்.

ரோஷக்காரர்களான இவர்களிடம், “உங்களால்தான் எல்லாம் நடக்கிறது” என அவரது புகழ் பாடினால், நமக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்வர்.
இடைவிடாத உழைப்பால் பெரும் பதவியையும் பொருளாதார ஏற்றத்தையும் அடைந்துவிடுவர். பொறாமைக்காரர்களைக் கண்டால் பொசுக்கிவிடுவர்.
அந்த அளவிற்கு புறங்கூறுதல் இவர்களுக்குப் பிடிக்காத காரியமாகும். இவர்களுக்கு சூடான, காரம் அதிகமுள்ள உணவு வகை பிடிக்கும். கௌரவப் பிரச்சனையால் பல நண்பர்களை இழக்கவேண்டி வரலாம்.

இவர்களின் குணாதிசயம் போன்றே உடல்வாகும் நன்றாகவே இருக்கும். எக்காரணத்தை முன்னிட்டும் சுய கௌரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

எதிர்ப்புகளைத் துச்சமாக மதிக்கும் இவர்களுக்கு, கண்கள் எரிச்சலாக இருக்க வாய்ப்பு உண்டு. எந்தச் செயலிலும் தீர்க்கமான சிந்தனைக்குப் பின் இறங்குவதால், தோல்வி என்பது மிகக் குறைவு.

இவர்களுக்கு அரசாங்கப் பதவி எளிதில் கிடைத்துவிடும். பணியில் ஏனோ, தானோ என்று இருப்பதில்லை. நேர்மை, நீதி, நியாயம், கண்ணியம், நாட்டு நலன் – இவற்றைக் கடைப்பிடித்து நற்பெயர் பெறுவர். அடிமைப்படுவது என்பது அறவே ஆகாது.

மாபெரும் நிறுவனங்களை உருவாக்கி நிர்வாகம் செய்யும் இவர்கள், தன் குடும்பத்தினருக்கும் நேரம் ஒதுக்குவது, அவர்களைக் குதூகலமடையச் செய்யும். தன் நுண்ணிய அறிவால் பலரும் அறியாத விடயங்களை வெளிக்கொண்டு வருவர். சாஸ்திரம், வானியல், மருத்துவம், இசை, சினிமா, பத்திரிகைத்துறை போன்றவற்றில் சரித்திரம் படைப்பார்கள்.

பொருளாதார ரீதியாக இளம் வயதில் துன்பப்பட்டாலும் 40 வயதிற்கு மேல் இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது எனப் புலம்பும் அளவிற்குச் சம்பாதிப்பர். கிராமங்களில் இவர்களுக்கு `நாட்டு வக்கீல்’ எனப் பெயருண்டு.

அந்த அளவிற்கு மிகச் சரியான நீதி வழங்குவர். நற்பண்புகளால் மற்றவர்களை எளிதில் தன் பக்கம் இழுத்துவிடுவர். தான் வசிக்குமிடத்தில் அழகும் ஒழுங்கும் உயர்வும் இருக்க வேண்டும் என நினைப்பர்.
சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள், ஏழை எளியோருக்கு இவர்கள்தான் ஆபத்பாந்தவன் எனக் கூறலாம். அந்த அளவிற்கு பொது நிறுவனங்கள் நடத்தி, நலிந்தோரை வாழவைக்கத் தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்வர் ‘I’இல் பெயர் அமைந்தோர் புத்திசாதுர்யமானவராக இருப்பர் என்பதில் ஐயமில்லை.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment