Monday 6 August 2012

D யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்? (முழு கணிப்பு)


D என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள் ராஜதந்திரத்துடன் செயல்படுவார்கள். ஆற்றல்மிக்க பேச்சால் பலதரப்பு மக்களின் நட்பையும் பெறுவார்கள். அதேவேளை, எதிர்ப்பையும் அதிகமாகவே சம்பாதிப்பார்கள். குடல், கண், தொடர்பான நோய்கள், மூட்டுவலி, பித்தம் போன்றவற்றால் அவ்வப்போது அவதிப்படுவார்கள்.

ஆணாயினும், பெண்ணாயினும் இல்லறத்துணை சிறப்பாக அமையும். அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைத்து அதில் வெற்றியும் பெறுவார்கள். கடவுள் நம்பிக்கையும் கைகொடுக்கும். துன்பத்திலும் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வார்கள். சுவை மிகுந்த உணவு வகைகளில் விருப்பம் அதிகம். சாப்பாட்டில் காரமும், அசைவ வகையும் அதிகமாக இருக்கும்.

சிலர் தொண்டு நிறுவனங்கள் நடத்திப் பெரும் புகழும், பணமும் சேர்ப்பர். அரசின் கட்டுப்பாடுகள் மக்களுக்கு சாதகமாக இல்லாத பட்சத்தில், எல்லோரும் ஏற்கும்படி சட்டத்தை மாற்ற வேண்டும் எனப் போராடுவார்கள்.
சோர்ந்து கிடக்கும் நண்பர்களையும், உற்றார் உறவினர்களையும் சுறுசுறுப்பாக இருக்கும்படி அறிவுரை சொல்லி அவர்களை உற்சாகப்படுத்துவார்கள். தான் செய்தது தவறு என்றால் அதை ஒப்புக்கொண்டு தன்னை விட வயதில் குறைந்தவராக இருந்தாலும் மன்னிப்புக் கேட்கத் தயங்கமாட்டார்கள்.

உடற்பயிற்சியிலும், அழகுக்கலையிலும், வாகனங்களை ஓட்டுவதிலும் மிகுந்த நாட்டமுடையவராக இருப்பார்கள். புராதன பொருட்களைச் சேர்ப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். நாட்டுப்பற்று மிகுந்த இவர்கள் வாசனைத் திரவியங்கள் பூசுவதிலும், அழகான ஆடை அணிவதிலும் தனிச்சுவை காண்பார்கள். சாணக்கியர்களான இவர்களுக்கு வாய்தான் எதிரி. இறைவன் தந்த அனைத்து இன்பங்களையும் அனுபவிக்க ஆசையுடன் காத்திருக்கும் இவர்கள் முயன்றால் முடியாத விஷயமே இல்லை.

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்ற தீர்க்கதரிசனத்துடன் காய்களை நகர்த்துவார்கள். கம்பீரம் மிக்கவர்கள். எதிலும் கவனமாக இருப்பார்கள். வீர, தீரச் செயல்களில் ஆர்வம் இருக்கும். சில சமயங்களில் பிடிவாத குணம் மேலோங்கும். சூரியக்கதிர்கள் இந்த எழுத்தின் வழியாக உள்ளே புக முடியாது என்பதால் சிலரிடம் இவர்களது கருத்துகள் எடுபடாமல் போகலாம். அந்தக் கோபத்தில் தன் கருத்து எடுபடும்வரை பிடிவாதம் பிடிப்பார்கள். இதனால் கெட்ட பெயர் வாங்கும் சந்தர்ப்பமும் உருவாகலாம்.

எந்த நாடும் தன் சொந்த நாடு, எந்த ஜாதியும் தன் சொந்த ஜாதி என்று கூறுவார்கள். பல மொழிகளைப் படிப்பதில் ஆர்வம் இருக்கும். அவற்றைச் சரளமாகவும் பேசுவார்கள். அங்க அசைவின் மூலம் பெண்களைக் கவரும் சக்தி உண்டு. பெரும்பாலான நாட்களை வெளியூர்களிலேயே கழித்து விடுவார்கள்.

பிறருக்கு மனமுவந்து உதவும் குணம் இவர்களிடம் இருந்தாலும், இவர்களுக்கு உதவத்தான் ஆளில்லை. மந்திர, தந்திரங்களில் நாட்டம் அதிகம். இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவே சிலருக்கு அதிக நாள் பிடிக்கும். மிக நெருக்கமானவர்கள். இவர்களின் ஆலோசனைகளை விரும்பி ஏற்றுப் பலனடைவர். தன் மனதுக்கு சரியெனப் பட்டதை, அடுத்தவரிடம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் மிக நாசூக்காகத் திணித்து விடுவர். துணிச்சல், சலியாத உழைப்பு, முன்னேற்றம் ஆகியக குணங்கள் இந்த எழுத்துக்கு உண்டு.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment