Sunday 12 August 2012

சீன ஜோதிடம் சுறு சுறுப்பு புலி

சுறு சுறுப்பு புலி
நேரம் : இரவு 3.00 மணி முதல் 5.00 வரை
உரிய திசை : கிழக்கு / வடகிழக்கு
உரிய காலங்கள் குளிர்காலம் / பிப்ரவரி மாதம்
நிலையான மூலகம் மரம்
யின் / யாங் யாங்

http://static.howstuffworks.com/gif/willow/tiger-info0.gifகடவுளர்கள் வைத்த ஆற்றைக் கடக்கும் போட் டியில் எலி முதலிலும், எருது இரண்டாவதாகவும், வந்து முதல் இரண்டு வருடங்களின் சின்னங் களாக தெரிவு செய்யப்பட்டன. எத்தனை வலிய தாக இருந்தபோதும் புலி மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. இது அவர்களை ஆச்சரித்திற்கு உள்ளாக்கியது. காரணம் கேட்டபோது, புலி நீந்தி வரும் போது ஆற்றின் வேகம் அதிகமானதாக இருந்தாலும் மிகவும் சிரமப்பட்டு அதை எதிர்த்து நீந்தி வந்த காரணத்தாலும், சிறிது தாமதம் ஏற் பட்டு என்று புலியார் கூறியதாக கதை ஒன்று உண்டு.
1902, 1914, 1926, 1938, 1950, 1962, 1974, 1986, 1998, 2010, 2022, 2034, 2046 ஆகிய வருடங்களில் பிறந்தவர்கள், அனைவரும் புலி வருடத்தைச் சேர்ந்தவர்கள். இந்தத் தொடரைப் படிப்போர் தாங்கள் எந்றத வருடத்தைச் சார்ந்தவர் என்பதை முந்தைய தொடர்கள் மூலம் அறிந் திருப்பீர்கள். இப்போது தெரிந்துகொள்ள வேண் டுமா ? கீழ்க்கண்ட தேதிகளுக்குள் பிறந்திருந்தால் அவர்கள் அனைவரும் புலி வருடத்தைச் சேர்ந்த வர்கள் ஆவார்கள்.

பிப்ரவரி 08, 1902 - ஜனவரி 28, 1903
ஜனவரி 26, 1914 - பிப்ரவரி 13, 1915
பிப்ரவரி 13, 1926 - பிப்ரவரி 01, 1927
ஜனவரி 31, 1938 - பிப்ரவரி 08, 1939
பிப்ரவரி 17, 1950 - பிப்ரவரி 05, 1951
பிப்ரவரி 05, 1962 - ஜனவரி 24, 1963
ஜனவரி 23, 1974 - பிப்ரவரி 10, 1975
பிப்ரவரி 09, 1986 - ஜனவரி 28, 1987
ஜனவரி 28, 1998 - பிப்ரவரி 15, 1999
பிப்ரவரி 14, 2010 - பிப்ரவரி 02, 2011
இனி இந்தத் தொடரில் புலி வருடத்தைச் சேர்ந்தவர்களின் குணாதிசயங்களைப் பற்றிப் பார்ப்போம்.
சீன ஜோதிடத்தில் மிகவும் சுறுசுறுப் புக்குக் பேர் போன சக்தி வாய்ந்த சின் னம் இது. புலிவாசிகள் வசீகரத்திற்கும், அதிகாரத்திற்கும், எரிச்சலுக்கும் பேர் போனவர்கள். அவர்கள் பொறுமைசாலி களானாலும் கோபக்காரர்கள். அமைதியானவர்களானாலும் எதிர்க்க வல்லவர்கள். வடி வத்தில் சிறுத்தபோதும் கம் பீரமானவர்கள். அச்சுறுத் தினாலும் அன்பான வர்கள். அவர்களி டம் இருக்கும் பல் வேறுபட்ட இந்த குணங்களின் காரணமாக அவர்கள் தங்க ளுடைய மனத்தை நிலை நிறுத்த சற்றே கடினமாக உணர்வார்கள். அவர்கள் தன்மை யைக் குறிப்பிட்டுச் சொல்வது மிகக் கடினம். புலி வாசிகள் அதிக தற்பெருமை கொண்டவர்கள். பொறாமை கொண்டவர்கள்.

புலிவாசிகள் கட்டுக்குள் இருக்கும்போது தெரிந்த சூழலில் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப் பார்கள். அவர்கள் தங்கள் உணர்வுகளை கட்டுக் குள் வைக்காமல் போனால், பல பிரச்சினைகளைச் சந்திக்க நேரும். அவர்களின் வாழ்க்கை முழுவ துமே உணர்ச்சி பூர்வமாக இருக்கும். அதுவே அவர்களுக்கு பிடித்த குணமும்கூட வாழ்க்கையை விரும்பி வாழ வேண்டும் என்ற மனோ நிலையைக் கொண்டவர்கள். நிறைவாக வாழ வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள். ஏதாவது ஒரு தீரச் செயலில் ஈடுபட வேண்டுமென்றாலும் நொடியில் முடிவு செய்து காரியத்தில் இறங்கத் தயங்க மாட்டார்கள்.
புலிவாசிகள் புதிய புதிய சவால்களைச் சந்திக் கப் பாய்வார்கள். பணத்திற்கும் அதிகாரத்திற்கும் செவி சாய்க்க மாட்டார்கள், மயங்க மாட்டார்கள். அவர் கள் உணர்வுப் பூர்வமான வர்கள், தங்களுக்கா கவோ அல்லது உறவி னர்கள் நண்பர்களுக் காகவோ முன்னின்று பேச வேண்டிய, செய்யவேண்டிய சமயங்களில், அச்ச மற்று தங்களை முன் னிலைப் படுத்திக்கொண்டு செயல்படுவர். சமுதாயத் தில் இருக்கும் அநீதிகளை எதிர்க்கத் துணிவார்கள். சரி யான கருத்துக்களை ஏற்று, அதன்படி சமுதாயம் நடக்க வேண்டும் என்று அதற்கான காரியங்களில் ஈடுபட முயல்வார்கள்.
அவர்களுக்கு துணிகரமான செயல்களில் ஈடு பட மிகவும் பிடிக்கும். புலிவாசிகள் ஒப்பிட்டுக் கூற முடியாத அளவிற்கு மிகுந்த தைரியசாலிகள். போர்க்காலங்களில் முன் நிற்க வல்லவர்கள். மக் கள் மனதைத் தன் பக்கம் ஈர்ப்பதில் அரசர்கள். அவர்களது கம்பீரமான தோற்றம், செயல் மற்ற வர்களை அவர்களை பால் ஈர்க்கும் தன்மை கொண்டது. புலிவாசிகள் எப்போதும் உண்மை யின் பக்கமே நிற்பதன் காரணமாக, அவர்கள் நல்லவற்றிற்காக போராடி, இறுதி வரை போராடி வெல்ல முயல்வார்கள். கோபப்பட்டாலும் அவர் கள் உண்மையாயனவர்களாகவும், தாராள மனம் உள்ளவர்களாகவும் அன்பானவர்களாகவும் இருப் பார்கள். அவர்கள் நகைச்சுவை தன்மை கொண் டவர்கள். அவர்கள் மக்களிடமும் சமுதாய நலனி லும் மிகுந்த அக்கறை கொண்டவர்கள். புலிவாசி கள் செய்வதை ஒத்துக்கொள்ளாதவர்களும் கூட உள்ளுக்குள் அவர்களைப்போற்றுவார்கள்.
புலி காட்டின் அரசனாக இல்லாத போதும், மிகச் சாதாரண விலங்கன்று. புலிவாசிகள் திறமை வாய்ந்த சுயப்பற்று மிக்க மனிதர்கள். அவர்கள் வசீ கரமானவர்களாகவும், நகைச்சுவை தன்மை கொண்டவர்களாகவும் இருந்த போதிலும், சில நேரங் களில் தனிமையை விரும்புவார்கள். புலிவாசிக ளின் பலமான குணம் வாழ்க்கையில் உயரும் நோக்கமும் அதை அடைய இருக்க வேண்டிய கட் டுப்பாடும்தான். புலிவாசிகளுடன் பழகும் போதும் சற்றே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர் கள் எப்போது பாய்வார்கள் என்றே சொல்ல முடி யாது. அவர்களது உணர்வுகள் அதிகமாகவே ஊசலாட வல்லது. இத்தகைய குணம் சில சமயம் அவர்களுககு சாதகமாகவும், பாதகமாகவும் அமைகிறது.
புலிவாசிகள் கற்றுக் கொள்ள வேண்டிய விசயம் எல்லாவற்றிலும் மிதமாக நடந்து கொள்வது. அவர்க ளது சக்தியை ஒருமுகப் படுத் திச் செயல்பட்டால் அவர்க ளால் எதையும் நல்லபடி யாக சாதிக்க முடியும். அவர்கள் எப்போதும் எந்தக் கூட்டத்திலும் தங் களைக் குறிப்பிட்டுக் காட்டிக் கொள்ளும்படி நடந்து கொள்வார்கள். அவர்கள் எப்போதும் செயல்கள் செய்து கொண்டே இருக்க விரும்புவார்கள். சும்மா இருப்பது சுகமன்று என்ற எண்ணம் கொண் டவர்கள். எவ்வளவு தாழ்ந்த நிலையை அடைந்தபோதும் அவர்கள் மனம் தளர மாட்டார்கள். முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமென்றாலும் அதைச் செய்யத் தயங்க மாட்டார்கள்.
தொழில்
பிறவிலேயே தலைமை தாங்கும் குணம் கொண்டவர்கள். அவர்களிடம் இருக்கும அதி காரத் தன்மை அவர் அருகே இருக்கும் அனை வரையும் அவர்கள் விரும்பியபடி வழி நடத்திச் செல்ல உதவும். வேலை இடங்களில் அவர்கள் தங் களுக்குள் இயற்கையாகவே அமைந்த தலைமை குணத்தைப் பயன்படுத்த முயல்வர். இப்படி இருந்தபோதும், அவர்கள் தனியே வேலை செய்ய விரும்புவார்கள். அவர்கள் வியாபார வல்லுநர் களாகவும், சமுதாய போராட்ட வீரர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும், பயணக் குறிப்பாளர் களாகவும், நடிகர்களாகவும், விமான ஓட்டு நர்களா கவும், எழுத்தாளர்களாவும் இருக்கத் தகுந்தவர்கள்.


உறவு
அன்பு கொண்டவர்களிடம் காட்டும் பரிவும் நம்பிக்கையும் அவர்களை வசீகரமானவர்களாகவும், ஆளும் தன்மை உள்ள உருவம் கொண்டவர்களாயும் காட்டும். புலி ஆண்டில் பிறந்தவர்கள் பழகுகிறவர்களிடம் மதிப்பும் மரியாதையும் எளிதில் பெற்று விடுவார்கள். புலிவாசிகளின் கூட்டாளிகளும் அவர்களுக்கு இணையாகச் சுறுசுறுப்பாக இருப்பது நல்லது. அவர்கள் உறவுகளில் தங்களது ஆதிக்கத்தைக்காட்டுவார்கள்.


இங்கிதமாக நடந்து கொள்பவர்களைக் கண்டால் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். பற்பல பரிசுகளைத் தந்து அவர்களை ஆதரிக்கத் தயங்க மாட்டார்கள். விருந்து வைத்தால், விருந்தாளிகளை மிகவும் அன்புடனும், ஆதரவுடனும் கவனித்துக்கொள்வார்கள். அவர்கள் உணர்வுகளைப் புண்படுத்தும் படி நடந்து கொள்வது நல்லதல்ல. அவர்கள் எளிதில் யாரையும் மன்னிக்க மாட்டார்கள்.


சுகாதாரம்
மன அழுத்தம் ஏற்படும்போது மிகவும் மோசமாக நடந்துகொள்வார்கள். உணர்ச்சிக் கொந்தளிப்பில் மூழ்கி விடுபவர்கள். அவர்களின் செயல்கள் நண்பர்களையும் பகைவர்களையும் மிகவும் அச்சுறுத்தும்.


புலிவாசிகளுக்கு உடலில் ஏதும் காயம் பட்டால் அவர்கள் எல்லாரின் அனுதாபத்தையும் எதிர்பார்ப்பார்கள். எந்தவித லாஜிக்கும் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு உடல் நிலை சீராவதே முக்கிய நோக்கமாக இருக்கும். அதனால் யார் எதைச் சொன்னாலும் அதை சிரமேற்கொண்டு அப்படியே செய்ய முற்படுவார்கள்.


வேலை செய்வதில் மற்ற எல்லா விசயங்களையும் மறந்துவிடுவார்கள். அதனால் விரைவில் களைப்படைந்து விடுவார்கள். பிறகு வெகு விரைவிலேயே பாயத் தயாராவார்கள். அதனாலேயே அர்களின் உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகும். அதனால் வாழ்க்கையைச் சமநிலையுடன் எடுத்துக் கொள்ளும் தன்மையைப் பெற முயல வேண்டும்.

புலிவருடத்தைய பிரபலங்கள்
தேவநேயப் பாவாணர், ராஜாஜி, ரஜினிகாந்த், எஸ்.ஜானகி, நடிகர் விஜய், மகேஷ்பூபதி, சானியா மிர்சா, கார்ல் மார்க்ஸ், மர்லின் மன்றோ, மார்கோ போலோ, இரண்டாம் எலிசபெத், டாம் குரூஸ்


அதிர்ஷ்ட எண்கள்: 4,5,7,9,13,34,44,45,54

ஒத்துப்போகும் விலங்குகள்: நாய், குதிரை, டிராகன்

ஒத்துப்போகாத விலங்குகள்:
ஆடு, எருது, குரங்கு


மூலகக் குணங்கள்
புலிவாசிகள் ஐந்து மூலகங்களுடன் சேரும்போது வெவ்வேறு குணங்களைப் பெறுவதாகச் சீன சோதிடம் நம்புகிறது.


நெருப்பு புலி
(பிப்பிரவரி 13, 1926 - பிப்பிரவரி 01,1927
பிப்ரவரி 09,1986 - சனவரி 28,1987)

குணங்கள்
உதார குணம், உதவுந் தன்மை, ஆர்வம், ஊக்கம்போன்ற குணங்களின் இருப்பிடம். நல்ல பக்கத்தையே பார்க்கும் சுபாவம் உள்ளவர்கள். மற்றவர்களை மகிழ்விக்கும் பண்பு கொண்ட காரணத்தால் தலைவர்களாகவும் இருப்பார்கள்.

மரப்புலி
(சனவரி 26, 1914 - பிப்பிரவரி 13,1915
சனவரி 23, 1974 - பிப்பிரவரி 10, 1975)

குணங்கள் வசீகரம், தலைமை, கூட்டுறவில் நாட்டம், பொறுமை, உதவும் மனப்பான்மை போன்ற குணங்களைக் கொண்டவர்கள்.

பூமி புலி
(சனவரி 31, 1938 - பிப்பிரவரி 18,1939
சனவரி 28, 1998 - பிப்பிரவரி 15, 1999)

குணங்கள் கடின உழைப்பு, படிப்பதில் அக்கறை, நடுவு நிலைமை, பொறுப்பு, குறிக்கோளின் மேல் பற்றுதல் ஆகிய குணங்களைக் கொண்டவர்கள். சூழ்நிலைக் கைதியாக மாட்டார்கள். பாய்வதற்கு முன் எல்லா பக்கங்களையும் அலசி ஆராயும் தன்மை பெற்றவர்கள்.

உலோக புலி
(பிப்பிரவரி 17,1950 - பிப்பிரவரி 05 , 1951
பிப்பிரவரி 14, 2010 - பிப்பிரவரி 02 , 2011)

குணங்கள் ஆக்ரோஷம், வசீகரம், சுயநலம், ஊக்கம் போன்ற குணங்களால் ஆனவர்கள். குறிக்கோளை அடையும் வரை ஓய மாட்டார்கள். தவறான முடிவை எடுப்பதில் வல்லவர்கள். ஆதனால் அதைத் திருத்திக்கொள்வது நலம் பயக்கும்

நீர் புலி
(பிப்ரவரி 08,1902 - ஜனவரி 28,1903
பிப்ரவரி 05, 1962 - ஜனவரி 24,1963)

குணங்கள் கூர்ந்து நோக்குதல், நடுவு நிலைமை, நேர்மை, திறந்த மனம்,சாந்தம் போன்ற குணங்களைக் கொண்டவர்கள். அடுத்தவர்களின் வார்த்தைகளுக்குச் செவி மடுப்பவர்கள். நீங்கள் புலி வருடத்தில் பிறந்திருந்தால், மேற்சொன்ன குணங்களைக் கொண்டிருப்பீர்கள் என்று சீனர்கள் கணிக்கின்றனர். புலிவருடம் நிலையற்ற தன்மை கொண்டது. அந்த வருடத்தில் போர், இயற்கை சீற்றம், போராட்டம் ஏற்படும். மாற்றங்கள் நிறைந்து காணப்படும். அவை நன்மையில் முடியும் தன்மையும் கொண்டவையாகவும் அமையும்.

No comments:

Post a Comment