Saturday 11 August 2012

நவக்கிரக மந்திரங்கள் - சுக்கிரன்


சுக்கிரன் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சுக்கிர தசை அல்லது சுக்கிர அந்தர் தசையின் போது:

  • சுக்கிரனின் கடவுளான தேவியைத் தினமும் வழிபடவேண்டும்.
  • தினசரி ஸ்ரீ சூக்தம் அல்லது தேவி துதி அல்லது துர்கா சாலிசா படிக்க வேண்டும்.

  • சுக்கிர மூல மந்திர ஜபம்:

  • "ஓம் ட்ரம் ட்ரீம் ட்ரௌம் ஷக் சுக்ராய நமஹ",

    40 நாட்களில் 20000 முறை சொல்ல வேண்டும்.

  • சுக்கிர ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.

  • ஹிமகுந்த ம்ருணாளாபம்
    தைத்யானாம் பரமம் குரும்!
    ஸர்வாசாஸ்த்ர ப்ரவக்தாரம்
    பார்கவம் ப்ரணமாம் யஹம்!!




    தமிழில்,

    சுக்கிரமூர்த்தி சுபமிக யீவாய்
    வக்கிரமின்றி வரமிகத் தருள்வாய்!
    வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
    அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே!!


  • தொண்டு: துணி அல்லது வெள்ளிக்கிழமை ஒரு பெண்ணிடம் வெண்ணை அல்லது தயிர் நன்கொடை கொடுக்கவேண்டும்.

  • நோன்பு நாள்: வெள்ளிக்கிழமை.

  • பூஜை: தேவி பூஜை.

  • ருத்ராட்சம்: 9 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.

  • சுக்கிர காயத்ரி மந்திரம்

  • அச்வ த்வஜாய வித்மஹே தநு: ஷஸ்தாய தீமஹி|
    தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்||


    சுக்கிர தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டத்தின், 36 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.

    No comments:

    Post a Comment