Saturday 11 August 2012

நவக்கிரக மந்திரங்கள் - சனி



சனி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சனி தசை அல்லது சனி அந்தர் தசையின் போது:

  • சனியின் கடவுளான அனுமனைத் தினமும் வழிபடவேண்டும்.
  • தினசரி அனுமன் சாலிசா அல்லது அனுமான் ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.

  • சனி மூல மந்திர ஜபம்:

  • "ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ",

    40 நாட்களில் 19000 முறை சொல்ல வேண்டும்.

  • சனி ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.

  • நீலாஞ்ஜன ஸமாபாஸம்
    ரவிபுத்ரம் யமாக்ரஜம்!
    ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
    தம் நமாமி சனைச்சரம்!!




    தமிழில்,

    சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
    மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
    சச்சரவின்றிச் சாகா நெறியில்
    இச்சகம் வாழ இன்னருள் தா தா!!


  • தொண்டு: சனிக்கிழமையன்று நன்கொடையாக ஒரு எருமை அல்லது எள் விதைகள் கொடுக்கவேண்டும்.

  • நோன்பு நாள்: சனிக்கிழமை.

  • பூஜை: அனுமான் பூஜை.

  • ருத்ராட்சம்: 14 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.

  • சனி காயத்ரி மந்திரம்

  • காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|
    தந்நோ மந்த: ப்ரசோதயாத்||


    சனி தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் பாலா காண்டத்தின், 30 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.

    அனைத்து சனி தொடர்பான பிரச்சனைக்கும் தசரத சனி ஸ்தோத்திரம் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.

    No comments:

    Post a Comment