Tuesday 14 August 2012

பெங்சூயி காற்றில் ஒலி எழுப்பும் குழல் மணிகள்

பெங்சூயி
காற்றில் ஒலி எழுப்பும் குழல் மணிகள்

வீட்டில் அதிர்ஷ்டத்தை வளப்படுத்தும் அற்புத சக்தி குழல் மணிக்கு உண்டு. குழல் மணியில் உள்ள குழல்களின் எண்ணிக்கை மற்றும் அவை எந்தப் பொருளால் செய்யப்பட்டிருக்கிறது என்பதும் மிக முக்கியமானதாகும்.

ஒரு வீட்டில் குழல் மணியை எங்கு வேண்டுமானாலும் தொங்க விடக்கூடாது. அது தொங்க விடப்படவேண்டிய இடம் மிக முக்கியமானதாகும். ஆறு குழல்கள் உடைய குழல் மணி தொங்க விடுவதற்கு உகந்த இடம் வரவேற்பு அறையின் வடமேற்கு மூலையாகும். ஏனெனில் இந்தப் பகுதியை ஆட்சி செய்யும் மூல சக்தி உலோகமாகும். குழல் மணி உலோகத்தைக் குறிப்பதாகும். இவை நல்ல அதிர்ஷ்டத்தைப் பெருக்கவும் துரதிர்ஷ்டத்தைக் குறைக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

விஷ அம்பைத் திசை திருப்ப வேண்டுமானால் ஐந்து குழல்கள் உள்ள குழல் மணியைப் பயன்படுத்த வேண்டும். இது துரதிர்ஷ்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. ஏழு குழல்கள் உள்ள குழல் மணியை வீட்டின் மேற்குப் பகுதியில் தொங்க விடலாம்.

No comments:

Post a Comment