Tuesday 7 August 2012

தீய கனவுகள் தொல்லை தருகின்றனவா? இந்த மந்திரத்தை உச்சரியுங்க!






பலன்: தீய கனவுகளின் தீய பலன் நீங்கும், தோஷங்கள் விலகும்
சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம்
ஔர்வோஜ சோபிதோரஸ்கம் ரத்னகேயூரமுத்ரிதம்
தப்த காஞ்சன ஸங்காசம் பீதநிர்மலவாஸஸம்
இந்த்ராதிஸுர மௌளிஸ்த ஸ்புரன்மாணிக்ய தீப்திபி:
– ந்ருஸிம்ஹ கவசம்.
தமிழ் பொருள்:
நான்கு கைகளை உடையவரே, மிருதுவான உடல் பாகங்களைக் கொண்டவரே, தங்க குண்டலங்களை அணிந்து பேரெழிலுடன் காட்சி தருபவரே, நரசிம்மா, நமஸ்காரம். லட்சுமியின் பிரகாசமான ஒளியால் மின்னும் திருமார்பைக் கொண்டவரே, ரத்னமயமான தோள்வளைகளால் அலங்கரிக்கப்பட்டவரே, தூய்மையான பீதாம்பரத்தைத் தரித்தவரே, நமஸ்காரம். இந்திரன் முதலான தேவர்கள் அடிபணியும் மாணிக்க பாதுகைகள் அணிந்த பாதங்களை உடையவரே நரசிம்மா நமஸ்காரம்.
இந்தத் துதியை தீய கனவு ஏற்பட்டால் விழித்தெழுந்து சொல்லலாம்.
இந்த ஸ்லோகத்தை உளமாற ஜபித்தால், இனி தீய கனவுகளே உருவாகாது.

No comments:

Post a Comment