Tuesday 14 August 2012

நாஸ்ட்ரடாமஸ் சொன்னவற்றில் நடக்க இருப்பவை!!!


”இந்தப் பாதகன் நரமாமிசம் தின்பவனைவிட பயங்கரமானவன் இழிவான பிறப்பினை உடைய இவன் மனிதர்களைப் படுகொலை செய்தும் புறக்கணிக்கத்தக்க காரியங்களை செய்தும் தனது கொடுமைகளை
அரங்கேற்றுவான்,

 

இவனால் மனிதகுலமே வெக்கித்தனைகுனிந்து முக்காடிட்டுக்கொள்ளும், கிறிஸ்தவர்களின் கடைசிப்பகையாளனான இவனது பிறப்பு கி.பி 3659 இற்குப் பின்னராக இருக்கும் (C.10-10)

இவன் அல்பராஸ் (இப்போது ஸ்பெயின் எனப்படுகிறது) துறைமுகத்தின் பக்கமாக கேடலோனியாவில் இருந்து வந்தவன் உலகின் மிகவும் அபாயகரமானதாகக் கருத்தப்படும் ஜிங்குவாரா வழியாக ஐரோப்பாவுக்குள் காலடி எடுத்து வைத்து தன் கேடுவிளைவிக்கும் ஆற்ற மிகுந்த கைகளால் எதிரிகளை அழிப்பான், ஐரோப்பியாவின் பெரும்பாலான பகுதிகள் இவன்வசமாகும். ( C.10-11 ).

என உலகத்தின் கடைசிப்பகையாளியின் வருகையை அறிவித்திருக்கிறார் நாஸ்ட்ரடாமஸ்

மேலும்,

கி.பி 3647 – 3659 காலகட்டத்திலோ அல்லது அதற்குப்ப்பின்னரான காலகட்டத்திலோ “போப்” என்று சொல்லப்படும் யாரும் இருக்கமாட்டார்கள் யாராவது போப் ஆகவோ அல்லது தலைமைப்பாதிரியாராகவோ தெரிவு செய்யப்பட்டால் அவர்க்ளை எள்ளிநகையாடுவார்கள், அவர்களை அழிக்கும் வரை ஓயமாட்டார்கள், மிகவும் நல்லவரும் நேர்மையானவருமான அந்தப் போப்பை கொன்றுவிடுவார்கள் ( C.10.12)

மேலும் பிரான்ஸுக்குத் தெற்காக இருக்கும் ஒரு நகரத்தில் உள்ள மாட்டுக்கொட்டகையின் புற்குவியலுக்குள் ஒழிந்திருக்கும் சிப்பாய்கள் போப்பைக் கொன்ற அந்த நேர்மையற்ற கும்பலைத் தாக்குவார்கள், அவர்கள் அனைவரையும் கொன்றொழிப்பார்கள் ( C.10-13 )

அடுத்ததாக பிரித்தானிய இளவரசர் சார்லசின் பதவியிழப்பைப்பற்றிக் கூறுகின்றார்,

பிரிட்டனின் அரசியின் மரணத்துக்குப் பின்னர் அதாவது சீன முஸ்லீம் ஆட்சிக்காலத்தில் நாட்டின் தலைமைப்பொறுப்புக்கு யார் வருவது என்ற அதிகாரப்போட்டி நிலவும் அதற்கு முக்கிய காரனமாக தகுதியற்றவராக காணப்படும் சார்லஸ் விழங்குவார்,

சார்லசுக்கும் இளவரசி டயானாவுக்குமான திருமண விவாகரத்து சம்பந்தமான பிரட்சனைகள் பல தடைகளை உருவாக்கும், அந்த விவாகரத்து முறையற்றதாக நிரூபிக்கப்படும் இதனால் சார்லஸ் நாட்டைவிட்டே போகவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுவார், மேலும் அரசகுடும்பத்தைச் சாராத ஒருவர் சர்கரவர்த்தியாகத் தேர்ந்தெடுக்கப் படுவார், ஆனாலும் அவரில் சர்கரவர்த்திக்கான அதிவிசேட குணங்கள் காணப்படும் இது 1999 -2012 இற்குள் நடக்கலாம் (C.10-22)

பின்னரான காலத்தில் அதாவது 2013 – 2026 இற்கு இடைப்பட்ட காலத்தில் இங்கிலாந்தின் மன்னராக தெரிவுசெய்யப்பட்டிருந்தவர் திடீரென கொலைசெய்யப்படுவார் இதன் பின்னர் சார்லஸ் அல்லது அவரது மகன் வில்லியம் அரசனாக முடிசூட்டிக்கொள்வார் (C.10-26)

இவ்வாறான பல சுவையான திடுக்கிடும் சம்பவங்கள் நாஸ்ட்ரடாமஸ்இன் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன, பார்க்கலாம் இதில் என்ன என்ன நடக்கப்போகிறது எதனால் உலகம் அழியப்போகின்றது என, எது எப்படியோ நாஸ்ட்ரடாமஸை நம்புவர்களில் நானும் இப்போது ஒருவனாகிவிட்டேன் என்பதுமட்டும் தெளிவாகப் புரிகின்றது….

No comments:

Post a Comment