Tuesday 21 August 2012

ராசியான வர்ணங்கள்


அன்றாட வாழ்வில் எல்லாவற்றையும் நமக்கு ஏற்றதாக தெரிவு செய்து வாழ்வை செப்பனிட்டுக் கொண்டால் துன்பத்தின் வருகைக்கு அணை போட்டு விடலாம். சில நேரங்களில் நாம் எதை செய்யக்கூடாதோ அதனை அடுத்தவர் செய்கிறார் என்ற பொறாமை மற்றும் காழ்புணர்ச்சியால் நாமும் செய்து அல்லலுக்கு ஆளாகுகிறோம்.
நம் ராசிக்கு, லக்னத்திற்கு, பிறந்த தேதிக்கு, நட்சத்திரத்திற்கு, மாதத்திற்கு, பிறந்த வருடத்திற்கு ஏற்ப வர்ணங்களை, நிறங்களை, கலர்களை உபயோகிப்பது சிறப்பானது. வாகனங்கள், ஆடைகள், உள்ளாடைகள், வளையல்கள், நெற்றிப்பொட்டுகள், வீடுகளின் வர்ணங்கள் இவையாவற் றையும் பொருத்தமாக தெரிவு செய்தால் சுபிட்ச வாழ்வு வாழலாம்.
லக்ன வர்ணங்கள்

மேஷ லக்னத்தில் பிறந்தோருக்கு;சுக்கிரன், புதன், சனி ஆகிய கிரக நாதர்கள் பகை உணர்வோடு செயல்படுபவர்கள். வெள்ளை, பச்சை, கருப்பு ஆகிய நிறங்களை தவிர்த்துவிட வேண்டும்.

லக்னம்-ரிஷபத்திற்கு ;-சிவப்பு, வெள்ளை, இரத்த சிவப்பு, மஞ்சள் ராசியானதல்ல.

லக்னம் மிதுனத்திற்கு ; சிவப்பு, மஞ்சள், வெள்ளை, கிரிம்கல் ராசியானதல்ல.

லக்னம் கடகத்திற்கு ; பச்சை, வெள்ளை, கருப்பு பொருத்தமற்றது.

லக்னம் சிம்மத்திற்கு ; வெள்ளை, பச்சை, கருப்பு வேண்டாம்.

லக்னம் கன்னிக்கு ; சிவப்பு, வெள்ளை, மஞ்சள்-பகை வர்ணம்.

லக்னம் துலாத்துக்கு ; கருஞ் சிவப்பு, மஞ்சள், வெர்மலியன்-கூடாது.

லக்னம் விருச்சிகத்திற்கு ; வெள்ளை, பச்சை, கருப்பு, நீலம்-தவிர்க்கலாம்.

லக்னம் தனுசு ; வெள்ளை, பச்சை, கருப்பு, ராசியற்றது.

லக்னம் மகரம் ; சிவப்பு, வெள்ளை, மஞ்சள் நல்லதல்ல.

லக்னம் கும்பம் ; சிவப்பு, வெள்ளை, கிரிம்-பொருந்தாது.

லக்னம் மீனம் ; வெள்ளை, பச்சை, நீலம், கருப்பு-தீமை யானது.

ராசியில் பிறந்தவர்கட்கு ராசி வர்ணங்கள்

மேஷம்; சிவப்பு, கார்மின்- ஸ்கார்லட், சிவப்பில் எல்லா ரகங்களும்.

ரிஷபம்; எலுமிச்சை-மஞ்சள், கிரிம், இளநீலம், ராமர் பச்சை.

மிதுனம்; தங்க நிறம், வெள்ளை, ஆரஞ்சு, பச்சை, சில்வர், வயலட், பேல் கிரே.

கடகம்; பச்சை, சில்வர், வெள்ளை, (கண்ணை பறிக்கும் கடும் வர்ணங்கள் தவிர்க்க வேண்டும்)

சிம்மம்; மஞ்சள், ஆரஞ்சு, தங்க நிறம், சிவப்பு, பச்சை.

கன்னி; வெள்ளை, ஆரஞ்சு, மஞ்சள், கிரே, நீலம், வயலட், ஸ்லேட் கலர்.

துலாம்; வெள்ளை, மஞ்சள், பிங்ரோஸ், (இளம் வர்ணங்கள்)

விருச்சிகம்; டர்கயஸ் புளு (ராமர் பச்சை) பிரவுன்- கிரே-ஒயின் கலர்- ஸ்கார்லட்.

தனுசு; நீலம், சிவப்பு, பர்பிள், இன்டிகோ, கத்திரிப்பூ கலர், பிங்.

மகரம்; பிரவுண், கிரே, கருப்பு, நேவி புளு, (எல்லாவித டார்க் கலர்களும்)

கும்பம்; நீலம், டர்கயஸ், கிரே, சாம்பல் நிறம், ராமர் பச்சை.

மீனம்; லேவண்டர், மாவ் பச்சை+ நீலம் கலந்த கலவை, வெள்ளை, வயலட்.


பிறந்த தேதியும், ராசி வர்ணமும்
(மிக முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது)

1, 1,0 29, 28 தேதிகளில் பிறந்தவர் கட்கு; மஞ்சள் மற்றும் மாலை சூரியன் அடையும்போது காணப்படும் சிவப்பு.

2, 11, 2,0 29 தேதிகளில் பிறந்தவர் கட்கு; பச்சை நிறத்தை நாடுபவர்கள்.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர் கட்கு; லோட்டஸ் பூ வர்ணம்.

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கட்கு; இளம் மஞ்சள்-கிரிம், சந்தன கலர்.

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த வர்கட்கு; பிங் மற்றும் இளம் சிவப்பு கட்டங்கள் அமைந்த ஆடைகள் ராசியானது.

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் கட்கு; இளம் பச்சை, லைட் சிவப்பு இணைந்த வர்ணம் பொருத்தமானது.

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் கட்கு; வானவில்லில் 9 வர்ணங்களுடன் வெள்ளை கலந்தால் ராசியானது.

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் கட்கு; கருப்பு நீலம், இவற்றுள் மஞ்சள் கலந்த ஆடை.

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் கட்கு; சிவப்பு, லைட் புளு, மஞ்சளில் எல்லா ரகங்களும் பொருத்தமானது.

No comments:

Post a Comment