Monday 13 August 2012

சீன ஜோதிடம் சீன சோதிடக் கணிப்பு

சீன ஜோதிடம்
சீன சோதிடக் கணிப்பு
புத்த பெருமான் இந்த உலகத்தை விட்டுச் செல்லும்போது, உலகிலுள்ள அனைத்து விலங்குகளிடமும் விடைபெற்றுச் செல்ல வேண்டி, அவையனைத்தையும் தம்மருகில் வருமாறு அழைப்பு விடுத்தாராம். அவர் அழைப்பை ஏற்று வந்த விலங்குகள் பன்னிரண்டே. தனது அழைப்பினை ஏற்று வந்த விலங்குகளுக்கு மதிப்புத் தரும் வகையில், அவரைப் பார்க்க வந்த வரிசையின்படி, பன்னிரண்டு வருடங்களுக்கு ஒவ்வொரு விலங்கின் பெயரை வைத்ததாக சீனாவில் கதை ஒன்று உண்டு.

இன்று சீனர்கள் ஒவ்வொரு வருடத்தையும் அந்த விலங்குகளின் பெயர்களைக் கொண்டே குறிப்பிடுகின்றனர்.

மனிதர்கள் தங்களுக்குக் கிடைத்த அறிவைக் கொண்டு, எத்தனையோ விடயங்களைக் கண்டுபிடித்தனர். எத்தனையோ விந்தைகளை ஆராய்ந்து தெளிவு பெற்று வருகின்றனர். எத்தனையோ புதுப்புதுக் கலைகளை உருவாக்கி வாழ்க்கையை சுவாரசியப்படுத்தி வருகின்றனர். அத்தகைய கலைகளில் ஒன்றே ஜோதிடக்கலை.

பல்வேறு நாடுகளில், பல்வேறு விதங்களில் ஜோதிடம் கையாளப்பட்டாலும் எல்லாவற்றிலும் ஒரு ஒற்றுமை உண்டு. குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வருடத்தில் பிறந்தவர்கள், குறிப்பிட்ட சிறப்பினை, குணங்களைக் கொண்டவர்கள் என்பதையும், அவர்கள் வருங்காலம் எப்படி இருக்கும் என்பதையும் கணித்துக் கூறுவதில் எல்லா நாடுகளும் ஒன்றுபடும். ஆனால் கணக்கிடும் முறை மட்டுமே வேறுபடும்.

http://www.buzzle.com/img/articleImages/279220-25422-48.jpgஇந்தியாவில் நட்சத்திரங்களின் போக்கினைப் பொறுத்தே ஒருவரின் குணாதிசயங்களையும் வருங்காலத்தையும் கணித்துக் கூறுவர். மேலைநாடுகளில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு குறியீடுகளைக் கூறி, அந்தக் குறியீடுகளில் பிறந்தவர்களின் தன்மையையும் குணங்களையும் வருங்காலத்தையும் கணிப்பர்.

சீனாவில் ஜோதிடம் என்பது பெரிய அளவில் நம்பப்படும் ஒன்று. வாஸ்து சாத்திரத்தின்படி பல விடயங்கள் செய்யப்படுகின்றன. ஒரு மனிதரின் பிறந்த வருடம், மாதம், நேரம் அடிப்படையில் பல கணிப்புகள் செய்யப்பட்டு, அதன் பின்னர் வாஸ்து கணிப்புகள் செய்யப்படுகின்றன.

சீனாவிலுள்ளவர்கள் 'உங்கள் வயது என்ன?' என்று பெரும்பாலும் கேட்கமாட்டார்கள். 'நீங்கள் எந்த வருடத்தைச் சேர்ந்தவர்?' என்றே கேட்பார்கள். அதற்கு, நீங்கள் பிறந்த ஆங்கில வருட எண்ணைக் குறிப்பிட்ட வேண்டிய அவசியம் இல்லை. எந்த விலங்கு வருடத்தில் பிறந்தவர் என்பதைச் சொன்னால் போதும். உங்கள் வயதைச் சரியாகக் கணித்து விடுவார்கள்.

முன் சொன்ன கதையில் குறிப்பிட்டபடி, சீனாவில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு விலங்கைக் குறிக்கும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மணி நேரமும் ஒவ்வொரு விலங்கினைக் குறிக்கும்.

சீனர்கள் ஒவ்வொரு மனிதரின் குணங்களும், செயல்களும், வெற்றி தோல்விகளும் அவர்கள் பிறந்த நேரத்தின் படி அமைகின்றது என்பதைப் பெரிதும் நம்புகின்றனர். கி.மு. 2600ல் பேரரசர் ஹூவாங் தீ என்பவரால் இந்த விலங்குச் சக்கரம் அறிமுகப்படுத்தப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. கல்வியாளர்கள், இந்த ஜோதிடம் இந்தியாவிலிருந்து சீன வம்சத்தின்போது புத்த மத போதகர்களால் கொண்டு வரப்பட்டது என்றும் கூறுவர்.

சீனாவில் முன்னோர்கள், வருடங்களை 10 தேவலோகத் தண்டுகளாகவும் 12 துருவக் கிளைகளாகவும் கணித்தனர். ஆனால் இவை மிகவும் கடினமாக இருந்த காரணத்தால், 12 கிளைகளை விலங்குச் சின்னங்களைக் கொண்டே குறிப்பிட ஆரம்பித்தனர். 10 தண்டங்கள் என்பன ஐந்து மூலகங்கள் மற்றும் யின்-யாங் முறைகளில் அமைந்தவை. மரம், தீ, பூமி, உலோகம், நீர் என்பன ஐந்து மூலகங்கள். இத்துடன் யின்-யாங் சேர்ந்தால் யின் மரம், யின் தீ, யின் பூமி, யின் உலோகம், யின் நீர் என்ற ஐந்தும் யாங் மரம், யாங் தீ, யாங் பூமி, யாங் உலோகம், யாங் நீர் என்ற ஐந்தும் சேர்ந்து பத்தாயின. இத்துடன் எலி, எருது, புலி, முயல், டிராகன், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய், பன்றி என்று 12 துருவக் கிளைகளான வருடங்கள் பன்னிரண்டும் சேர்த்து சீனர்களின் ஜோதிடங்கள் கணிக்கப்படுகின்றன. ஐந்து மூலகங்கள், யின்-யாங், பன்னிரண்டு வருடம் என்ற இந்தச் சக்கரம் 60 வருடச் சக்கரம்.

சந்திரனை அடிப்படையாகக்கொண்டே வருடத்தின் ஆரம்பம் கணிக்கப்படுகின்றது. இந்த வருடத்தினுள்ளே பன்னிரண்டு மாதங்கள் சீனப் புது வருடத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை பகுக்கப்படுகின்றன. அதில் இருக்கும் இருபத்து நான்கு மணி நேரத்தில், ஒவ்வொரு இரண்டு மணி நேரமும் மறுபடியும் விலங்குகளாகப் பகுக்கப்படுகின்றது.

முதலில் நீங்கள் எந்த விலங்கு வருடத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெரிந்துகொள்வோமா?

கீழ்க்கண்ட அட்டவணையைக் கொண்டு அதைக் கண்டுகொள்ளலாம்.

இந்தப் பட்டியல் சீன வருடத்தை அடிப்படையாகக் கொண்டது. சீன வருடத்தின் ஆரம்பம் மற்றும் முடிவு ஆங்கில வருடத்தின் ஆரம்பம் முடிவுக்கு சற்றே வேறுபடும். சீன வருடம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் வரும் முழு நிலவு நாளன்று ஆரம்பம் ஆகும். ஒரு மாதம் 29.5 நாட்கள் கொண்டது. ஆங்கில வருட அட்டவணைக்கு இணையாக்க சில வருடங்களில் கூடுதலாக ஒரு மாதம் சேர்க்கப்படுகிறது.

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பிறந்தவர்களுக்கு சற்றுக் கணக்கிட்டே வருடத்தைக் கணிக்கவேண்டி வரும். சரி, அப்படிப் பிறந்தவர்களும் சரியாக வருடத்தைக் கணிக்க வேண்டுமல்லவா? இதோ அதற்காக அட்டவணை.

No comments:

Post a Comment