Saturday 18 August 2012

பிருகு நந்தி நாடி & சப்த ரிஷி நாடி - பதிவு 9


இந்த பதிவில் பாப கர்த்தாரி யோகத்தைப் பற்றி மேலும் பார்ப்போம்.


கீழ்க்கண்ட உதாரணத்தைப் பாருங்கள்.

Image


மேற்படி உதாரணத்தில், மீனத்தில் புதன், சந்திரன், சுக்கிரன் ஆகிய மூவரும், கடகத்தில் குருவும் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்

மீனத்தில் புதன் பூரட்டாதி 4 லும், சந்திரன் உத்திரட்டாதி 3 லும், சுக்கிரன் ரேவதி 3 லும் இருப்பதாகவும், கடகத்தில் குரு புனர் பூசம் 4 லும் இருப்பதாகக் கொள்வோம்.

மீனத்தில் சந்திரன் பாபகர்த்தாரி யோகத்தில் இருக்கிறார். ஆனாலும் கடகத்தில் புனர்பூசம் 4 ல் உள்ள குருவுடன் பரிவர்த்தனை பெற்றிருப்பதால், சந்திரன் கடகத்தில் புனர்பூசம் 4 க்கும், குரு மீனத்தில் உத்திரட்டாதி 3 க்கும் இடம் மாறுவதால் சந்திரன் பாப கர்த்தரி யோகத்தில் இருந்து விடுபடுகிறார், குரு பாப கர்த்தாரி யோகம் பெறுகிறார். (புதன், சுக்கிரன் இருவரும் குருவுக்குப் பகை)

பாபகர்த்தாரி யோகம் பற்றி ஓரளவுக்கு தெளிவாக புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

ஒரு முறைக்கு இருமுறை திரும்பத் திரும்ப நிதானமாக படித்துப் பார்க்கும்போது புரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment