Saturday 18 August 2012

பிருகு நந்தி நாடி & சப்த ரிஷி நாடி - பதிவு 6


இந்த பதிவில் பரிவர்த்தனை பெற்ற கிரகங்களுக்கான விதிகளைப் பற்றி எழுதுவதாக குறிப்பிட்டிருந்தேன்.

பரிவர்த்தனை பெற்ற கிரகங்களுக்கான விதிகளைப் பார்ப்பதர்க்குமுன் ராகு கேதுகளுக்கான சிறப்பு விதி ஒன்றை பார்த்துவிட்டு பிறகு பரிவர்த்தனை பெற்ற கிரகங்களுக்கு செல்வோம்.


ராகு கேதுக்களுக்கான சிறப்பு விதி.


ராகு கேதுக்களுக்கு 3, 7, 11 ம் இடத்தில் உள்ள கிரகங்களுடன் இணைவு பெறாது.


கீழ்க்கண்ட உதாரண கட்டத்தைப் பாருங்கள், இன்னொரு சூட்சுமம் புரியும்

Image

ராகுவுக்கு 3 ல் சனியும், 11 ல் குருவும் 7 ல் செவ்வாயும், இருக்கிறார்கள். ஆனால் சனி, குரு, செவ்வாய் இம்மூவருக்கும் ராகுவின் தாக்கம் இருக்காது.

ஆனால் கேது வுடன் செவ்வாய் சேர்ந்திருக்கிறார், செவ்வாய்க்கும் 5 ல் சனியும், 9 ல் குருவும் இருக்கிறார்கள். செவ்வாய், சனி, குரு இம்மூவருக்கும் கேதுவின் தாக்கம் உண்டு.

இதையே வேறுவிதமாக சொல்வதென்றால், கேதுவுடன் செவ்வாயும், கேதுவுக்கு 5 ல் குருவும், 9 ல் சனியும் இருக்கிறார்கள். எனவே செவ்வாய், சனி, குரு இம்மூவருக்கும் கேதுவின் தாக்கம் உண்டு.

இனி பரிவர்த்தனை பெற்ற கிரகங்களைப் பற்றி பார்ப்போம்.

கீழ்க்கண்ட உதாரணக் கட்டத்தைப் பாருங்கள்.

Image

சுக்கிரன் ரசியாகிய துலாத்தில் சனியும், சனியின் ராசியாகிய மகரத்தில் சுக்கிரனும் இருக்கிறார்கள், அதாவது சனி, சுக்கிரன் தங்களது ராசிகளில் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள்.

அடுத்து புதன் ராசியாகிய மிதுனத்தில் குருவும், குருவின் ராசியாகிய மீனத்தில் புதனும் இருக்கிறார்கள், அதாவது குரு, புதன் தங்களது ராசிகளில் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள்.

பரிவர்த்தனை பெற்ற கிரகங்களை முதலில் அவர்கள் இருந்த நிலையிலேயே எந்தெந்த கிரகங்களுடன் சேர்க்கை பெறுகிறார்கள், பிறகு பரிவர்த்தனை பெற்ற தன் சொந்த ராசியில் இருந்து எந்தெந்த கிரகங்களோடு சேர்க்கை பெறுகிறார்கள், என்று இரண்டு வகையில் பார்த்து பலன் நிர்ணயிக்க வேண்டும்.

முதலில் சுக்கிரன் சனியைப் பற்றி பார்ப்போம்.

மகர சுக்கிரனுக்கு 5 ல் ரிஷபத்தில் உள்ள செவ்வாயுடனும் சேர்க்கை. பிறகு சுக்கிரனை துலாத்தில் வைத்துப் பார்க்கும்போது துலாத்திற்கு 9 ல் மிதுனத்தில் உள்ள குருவுடனும் சேர்க்கை ஏற்படுகிறது.

துலாத்தில் உள்ள சனிக்கு 9 ல் மிதுனத்தில் உள்ள குருவுடன் சேர்க்கை, பிறகு மகரத்தில் வைத்துப் பார்க்கும்போது மகரத்திற்கு 5 ல் ரிஷபத்தில் உள்ள செவ்வாயுடனும் சேர்க்கை.

அடுத்து குரு புதன் இவர்களின் பரிவர்த்தனையை பார்ப்போம்

மிதுனத்தில் உள்ள குரு 5 ல் துலாத்தில் உள்ள சனியுடனும் 12 ல் ரிஷபத்தில் உள்ள செவ்வாயுடனும் சேர்க்கை, பிறகு மீனத்தில் வைத்துப் பார்க்கும்போது, மீனத்திற்கு 11 ல் மகரத்தில் உள்ள சுக்கிரனுடனும் சேர்க்கை.

மீனத்தில் உள்ள புதனுக்கு 3 ல் ரிஷபத்தில் உள்ள செவ்வாய், 11 ல் மகரத்தில் உள்ள சுக்கிரன் இருவருடனும் சேர்க்கை. மிதுனத்தில் வைத்து பார்த்தால் மிதுனத்திற்கு 5 ல் உள்ள சனியுடனும் சேர்க்கை.

இப்படி இரண்டு வகையில் பலன் எடுக்க வேண்டும்.

இந்த விதியை ஒருமுறைக்கு இருமுறை திரும்ப படித்துப் பாருங்கள்.

இந்த விதியை புரிந்து கொள்வதில் சிரமம் எதாவது இருந்தால் கவலை வேண்டாம், பலன் அறியும் முறைகளைப் பற்றி தெரிந்துகொள்ளும்போது சுலபமாக புரியும்.

No comments:

Post a Comment