Sunday 5 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 97


பாடுவாய் பதியோனும் ரெண்டோன்கூடில்
பகருகின்ற அசுரகுரு பெலத்துநிற்க
கூடுவாய் குழவிக்கு நேத்திர ஊனம்
கொற்றவனே மாந்தியுமே கூடிநிற்க
தேடுவாய் ஜென்மனவ னுதிக்கும் போது
திடமாகச் செப்புவாய் நேத்திரமில்லை
ஆடுவாய் போகருட கடாட்சத்தாலே
அப்பனே புலிப்பாணி அறிவித்தேனே.


நான் கூறுவதை நீ நலமாகப் பாடுவாயாக! இலக்கினாதிபதியும் இரண்டுக்குடையவனைக் கூட எல்லாராலும் குறிக்கப்பெறும் அசுரகுருவான சுக்ராச்சாரியார் பலமாய் நிற்க அச்சென்மனுக்கு நேத்திர ஊனம் உண்டென்றும் அவர்களோடு மாந்தியும் கூடி நிற்க நேத்திரமே இல்லை யென்றும் சற்குருவான போக முனிவரின் அருளாணையால் புலிப்பாணி கூறும் கருத்தைப் புகலுவாயாக.

No comments:

Post a Comment