Sunday 5 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 96


தானேதா னின்ன மொன்று செப்பக்கேளு
தயவாக தனபதியுந் தனத்திலேற
கோனே தான் குமரனுக்கு தனமிருந்தும்
குவலயத்திற் கெட்டியடா காசுயீயான்
மானேதான் மக்கள் பெண்டிர் புஷ்டியாக
மடிரொம்ப உண்ணாமல் பதனஞ்செய்வான்
வீணேதான் போகருட கடாட்சத்தாலே
விதமாக புலிப்பாணி உரைக்கக்கேளே


நானே உனக்கு இன்னுமொன்றையும் கூறுகிறேன். அதனை கவனத்துடன் கேட்பாயாக! இரண்டுக்குடையவன் இரண்டாம் இடத்தில் அமர, அவன் அரச செல்வம் பெற்ற போதிலும் பூமியில் பணத்தை விரயம் செய்யாத கஞ்சனே ஆவான். தன்னுடைய பெண்டு பிள்ளைகளுக்குக்கூட பணம் ஈயான் என்பதோடு, உணவும் ஈயாது உலோபியாய் இருப்பான் என்றும் அவன் வீணான ஜன்மனே என்றும் போகரது அருளினால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment