Sunday 5 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 87


பாரப்பா யின்னமொரு புதுமைகேளு
படவரவ சனிசெவ்வாய் வெய்யோனேழில்
வாரப்பா வந்ததொரு தாரமெல்லாம்
வையகத்தில் மாண்டிடுவர் வரிசையாக
ஆரப்பா அட்டமத்தி லிவர்கள் நிற்க
அப்பெண்ணின் கணவனோ முந்திசாவன்
சீரப்பா போகருட கடாட்சத்தாலே
சிறப்பாகப் புலிப்பாணி நூலைப்பாரே.


இன்னொரு புதுமையான செய்தியினையும் நீ கேட்பாயாக! பட அரவும், சனியும், செவ்வாயும், சூரியனும் சேர்ந்து களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் அமர அச்சாதகனுக்கு வந்த தாரமெல்லாம் இப்பூமியிலே வரிசையாக மாண்டு போவார்கள். ஆனால் இவர்கள் அட்டமத்தில் அமர்ந்தார்களேயானால் அப்பெண்ணின் கணவனே (அதாவது சாதகன்) முன்னர் சாவான். இக்கருத்தையும் போகமுனிவரின் பேரருட் கருணையால் உனக்குச் சொன்னேன்.

No comments:

Post a Comment