Sunday 5 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 71


சூடினேன் இன்னமொரு சேதிகேளு
சுபருடனே நாலுபேர் கூடிநிற்க
ஆடினேன் அத்ற்க்குநால் மற்றோரெல்லாம்
அப்பனே அவனிதனில் முழுவாழவன்
கூடினேன் கோவேறு கழுதைகோடி
கொற்றவனே துரகங்கள் கோடாகோடி
தேடினேன் தேவர் வீரர் பகையுமெத்த
திக்கெட்டு மாளுமன்னன் தெரிந்துகொள்ளே


இன்னொரு விவரத்தையும் நான் கூறுகிறேன். அதையும் நீ நன்கு கவனிப்பாயாக. சுப கிரகத்துடன் நான்கு பேர் நிற்கவும் அதற்கு நாலில் மற்றோர் நிற்க அவன் (அச்சாதகன்) பூமியில் தீர்க்காயுளுடன் வாழ்வான். அவனுக்கு கோடிக் கணக்கில் கோவேறு கழுதைகளும் அதே போல் கோடானு கோடிக் குதிரைகளும் வாய்க்கும். அது மட்டுமல்லாமல் தேர் வீரர் படையும் கொண்டு எட்டுத்திக்கும் தன் அருளாணை கொண்டு அரசாளும் மன்னன் என்றே நீ கூறுவாயாக.

No comments:

Post a Comment