Saturday 4 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 65


கூடினேன் கரும்பாம்பு செவ்வாய் நீலன்
கொற்றவனே ஓரிடத்திற் கூடிநிற்க
தெடினேன் தையலிட பொருளுஞ்சேரும்
திடமான மனையுமது கட்டுவானாம்
சூடினேன் சுகமுண்டு சென்மனுக்கு
சுருதிமொழி பிசகாது சிலகாலத்தில்
ஆடினேன் அழுதாலும் வினையும்போமோ
அப்பனே அமடுகளுந் திடமாய்ச்சொல்லே


இன்னுமொரு செய்தியையும் நீ கேட்பாயாக! கரும் பாம்பு எனச் சொல்லப்படும் இராகுவும், செவ்வாயும் நீலன் எனும் சனிபகவானும் ஒருமனையில் கூடிநிற்க ஸ்திரீகளால் தனசேர்க்கை ஏற்படும். கீர்த்திமிகு வீடு கட்டுவான். அச்சென்மனுக்கு சுகம் உண்டு. எனது சற்குருவான போகமகா முனிவரது பேரருட்கருணையால் நான் கூறும் இம்மொழி தவறாது. எனினும் சில வேளைகளில் அழுதாலும் ஊழ்வினைப் பயன் விட்டுப் போகுமா என்ன? எனவே சிற்சில அமடுகளும் (துன்பங்களும்) வந்து சேரும் என்று திடமாகச் சொல்வாயாக.

No comments:

Post a Comment