Saturday 4 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 63


தாமென்ற அம்புலிக்கு நாலாமாதி
தயவாக லெக்கினத்து நாலோன் தானும்
யேனென்ற யெவ்விடத்தில் கூடிட்டாலும்
இதமாக அசுரகுரு இணங்கி நிற்க
தேனென்ற தேவிபரா துர்க்கை பூசை
திடமாகச் செய்திடுவன் வராகியோடு
கோனென்ற கொடியோர்கள் எதிர்நில்லார்கள்
கொற்றவனே வசியனடா கூறுகூறே


சிறப்புடைய சந்திரனுக்கு நான்கிற்குடையவனும் அதே போல் இலக்கினத்திற்கு நான்கிற்குடையவனும் இராசி மண்டலத்தில் எவ்விடத்தில் கூடி நின்றாலும், அதற்கு இதமாக அசுர குரு இணங்கி நிற்கவும், தேன் போன்று இனிமை செய்யும் தேவி பராசக்தி என்ற துர்க்கை மீது பேரன்பு பூண்டு பூசை செய்வதோடு வராகி பூஜையும் இணக்கமுறச் செய்வோன் என்றும் எத்தகைய சூழ்ச்சிகளும் கொடியவர்களும் இவனுக்கு எதிர் நிற்க மாட்டார்கள் என்றும் இவனே தேவதை வசியன் என்று திடமாகக் கூறுக.

No comments:

Post a Comment