Saturday 4 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 56


கேளப்பா குடினாதன் ஆட்சிஉச்சம்
கெட்டவர்கள் கண்ணுற்று நோக்கினாலும்
சூளப்பா சுகமில்லை களவுபோகும்
சோரு துணிக்குக் கையேந்தி நிற்கச்செய்யும்
ஆளப்பா அகத்திலே துன்பங்காணும்
அப்பனே அரண்மனையார் பகையுண்டாகும்
கூளப்பா கூட்டுறவு பிரிந்து போகும்
கொற்றவனே கொடுந்துன்பம் விளையும் பாரே.


இன்னொரு கருத்தையும் நீ உன்னிப்பாகக் கவனித்துக் கேட்பாயாக. இலக்கினாதிபதி ஆட்சி உச்சம் எய்திடினும் தீயகோள்கள் பார்வை பெறின் அச்சாதகனின் இல்லத்தில் களவு போகும். அவன் சோற்றுக்கும் துணிக்கும் கையேந்தி நிற்கும் நிலையும் ஏற்படும். அவன் மனையில் துன்பமே மிகும். அரசாங்கப்பகையும் அவனுக்கு உண்டாகும். கூட்டு வாணிகம் புரிந்தவர்களும் கூட்டுறவோடு இருந்தவர்களும் பிரிவர். கொடுந்துன்பம் விளையும் என்பதையும் குறித்துச் சொல்வாயாக.

No comments:

Post a Comment