Tuesday 14 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 296


நொண்டி வண்ணம்--நாலவன் திசைக்கு
தனனா தனதனதன--தனனா
தன்ன தனனதன தனனா (தனனா)


நாலவன் திசை-கேளு- அவந் நாகரிகமுள்ள விதிப்படி செய்ய- நாலேழில், பத்தில் நல்லக்கினமேறி கேந்திரிக்க நலமுள்ள சுகங்கொடுப்பன் - நாணய -சென்னல் வயல் நிதிகளும் மாடு மக்களும்- போகவிருத்தி யோகவிருத்தி- வாகனமும்- ஆளடிமை சேர்க்கைகளும் மெத்த உண்டு-கெடிமெத்தை வீடுமுண்டு- துலங்கிய- வியாபாரஞ் செய்வதில் லாபமுண்டு பூட்டம் வைத்த- ஜோசியத்தை- புலிப்பாணி விவரமாயுரைத்து விட்டேன் - தன்னாதனதன.


இலக்கினத்திற்கு நான்குக்குடையவன் திசையை நன்றாக நீ அறிவாயாக! மேலோர் சொன்ன மிக்க அறிவின்படி 1,7,9 ஆகிய இடங்களில் கேந்திரமேற அச்சாதகனுக்கு நாலுக்குடையவன் நலம் அருள்வான். நாணயம், சென்நெல், வயல்நிதி, மாடு, மனை, மக்கள் ஆகிய யோக விருத்தியை நல்குவன்: இச்சாதகனுக்கு வாகன யோகமும், ஆள் அடிமை சேர்க்கைகளும் ஏற்படும். தொட்டிக் கட்டு உள்ள அரண்மனை போன்ற \வீடும் வெதனம் சம்பாதிப்பான். இதுவரை முனிவர்களும் பதினெண் சித்தர்களும் பூட்டி வைத்த ரகசியத்தை புலிப்பாணி போகர் அருளால் உனக்குக் கூறினேன்.

No comments:

Post a Comment