Tuesday 14 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 283


ஒண்ணவன் விரயத்திலேற - மாதே
ஒன்பதோனாரெட்டி லீராறிலேற
பண்ணவேயிவனுக்கு பாக்கியம் - மெத்த
பண்டுபொருளெல்லாம் விரயஞ்சொல்தோழி


சங்கர சங்கர சம்போ சிவ
சங்கர சங்கர சங்கர சம்போ


இலக்கினாதிபன் 12-இல் நிற்க 9-க்குடையவனும் 2-குடையவனும் விரயஸ்தானமாகிய 12-இல் நிற்க இவனுக்குப் பாக்கியம் நிறைய உண்டெனினும் மூதாதையரின் சொத்துகளும் பிறவும் விரயமாகும் என்றே பலன் நிகழ்த்துவாயாக.

No comments:

Post a Comment