Sunday 12 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 245 - சனி மகாதிசை,சுக்கிர புத்திப் பலன்கள்


பாளில்லா காரிதிசை சுக்கிரபுத்தி
பாங்கான மாதமது முப்பத்தியெட்டு
நாளில்லா மங்கையரும் மனமகிழ்ச்சியுமாம்
நன்றான பெருஞ்செல்வம் நாலதிலேயுண்டாம்
ஆளில்லா அரசனுடன் அனுதினமும் வாழ்வன்
அணைகட்டு விரக்கஞருடன் அலங்காரமுண்டாம்
கோளில்லா சத்துருநோய் யில்லையதுபாரு
கோகனமாது செல்வம் கொறிப்பாள்தானே


மேலும் இக்காரியென்னும் சனிபகவானின் திசையில் சுக்கிர பகவானின் பொசிப்புக்காலம் 3 வருடம் 3 மாதங்களாகும். இக்காலகட்டத்தில் பெண்களால் மனமகிழ்வு உண்டாகும். இப்புத்தி வந்த நாள் தொட்டு வெகுவான தனப்ராப்ட்தி யோகம் உண்டாகும். எப்பொழுதும் அரசரோடு இணங்கி தினம்தோறும் மகிழ்வுடன் இச்சாதகன் வாழ்வதோடு வரும் பொருள் உரைக்கும் மந்திரிமார்களோடு அவருக்குச் சமமான அணியலங்காரங்களும் ஏற்படும். கோள் சொல்லிக் கொள்ளி வைக்கும் பலவாகிய பகைவர்களும் இல்லாதொழிவர். பொன் மகள் என்னும் இலக்குமி தேவி இச்செல்வ நலங்களைத் தருவாள் என போகர்அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சனி மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment