Sunday 12 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 240 - வியாழன் மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள்


தன்னிலே வியாழதிசை செவ்வாய்புத்தி
தன்மையில்லா மாதமது பதினொன்றாகும்
விண்ணிலே நாளதுவும் ஆறதாகும்
வீறான பலனதுவை விளம்பக்கேளு
புண்ணிலே அக்கினியால் வியாதிகாணும்
பூமியினால் விளைவுகுன்றும் மாடாடுசாகும்
விண்ணிலே போனாலும் சத்துருவுண்டு
வீணான விலங்கதுவும் விதிவசமேசாகும்


வியாழமகா திசையில் செவ்வாயின் பொசிப்புக்காலம் 11மாதம் 6 நாட்களாகும். இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களாவன: புண்களாலும், அக்னியாலும் நோய் வந்தடையும். பூமியில் விளைச்சல் குறைந்துபோகும். கன்றுகாலிகள் மரணமடையும் ஆகாயத்திலே பறந்து சென்றாலும் அங்கேயும் பகைவர் உளராவர். சிறைவாய்ப் படுதலும் அதனால் துன்புறுதலும் விதிவசமே என்று விதிவசமே என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் வியாழன் மகாதிசையில் செவ்வாய் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment