Sunday 12 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 239 - வியாழன் மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள்


காணவே வியாழதிசை சந்திர புத்தி
கனமுள்ள மாதமது பதினாறாகும்
கோணவே அதன் பலனை சொல்லக்கேளு
சுகமுடைய கலியாணம் சோபனங்களுண்டாம்
பேணவே சிவிகை முத்து வெண்குடையுமுண்டாம்
பெரிதான ராசாவால் பெருஞ்செல்வமுண்டாம்
பூணவே தாய்தந்தை மனைவியுடன் புத்திரன்
புகழுடன் வாழ்ந்திருப்பான் பூலோ கந்தன்னில்


வியாழ மகாதிசையில் சந்திர பகவானின் பொசிப்புக் காலம் 1 வருடம் 4 மாதங்களாகும். இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களான: நலம் தரத்தக்க வகையில் திருமணம் நிகழ்தலும் சுப சோபனங்களும் உண்டாகும். பல்லக்கு, முத்தாபரணம். வெண்குடை ஆகியன விரைந்து வந்து சேரும். பெருமையுடைய அரசர்களால் வெகுதனம் உண்டாகும். ஈன்ற தாய், தந்தை, மனைவி மக்களுடன் நிலைத்த புகழ் உடையவனாகி இவ்வுலகில் பெருமையுடன் வாழ்ந்திருப்பன் இச்சாதகன் எனப் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் வியாழன் மகாதிசையில் சந்திர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment