Sunday 12 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 237 - வியாழன் மகாதிசை, சுக்கிர புத்திப் பலன்கள்


போமென்ற வியாழதிசை சுக்கிரபுத்தி
பொருள்காணு மாதமது முப்பத்திரண்டு
ஆமென்ற அதன்பலனைச் சொல்லக்கேளு
அருளான லெட்சுமியும் அன்புடனே சேர்வாள்
சுபமென்ற சோபனமும் மனமகிழ்ச்சியுண்டாம்
சுகமான கன்னியுடன் சுகமுடனேவாழ்வன்
நாமென்ற நாடுநகர் கைவசமேயாகும்
நன்றாக அவனிதனில் நன்மையுடன் வாழ்வன்


வியாழ மகாதிசையில் சுக்கிர பகவானின் பொசிப்புக் காலம் 2 வருடம் 8 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன: மனையில் அருளே உருவான திருமகள் தானே விரும்பி வந்து உறைவாள். சுபசோபனங்கள் ஏற்படும். மனமகிழ்ச்சியுண்டாகும். சுகம் தரக்கூடிய கன்னிகையுடன் இன்பமாக வாழ்வான். நாடு நகரங்கள் தனதெனக் கைவசமாகும், இந்நிலவுலகில் நன்மை மிகுந்து புகழுடன் வாழ்வான் என போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் வியாழன் மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment