Sunday 12 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 234 - வியாழன் மகாதிசை, சனி புத்திப் பலன்கள்


வளருமென்ற வியாழதிசை சனியின்புத்தி
வாகான மாதமது முப்பதுவேயாகும்
வளருமென்ற நாளதுவும் பனிரெண்டாகும்
வன்மையுடன் அதன்பலனை வழுத்தக்கேளு
வளருமென்ற கெர்ப்பமுடன் போகம்சித்தி
வகையுடன் திரவியமும் பூஷணமுஞ்சேரும்
வளருமென்ற மன்னன்போல் வளருமது யோகம்
வாகன தண்டிகையும் வாகனமுமுண்டாம்


வியாழ மகாதிசையில் சனிபகவானின் பொசிப்புக் காலம் 2 வருடம் 6 மாதம் 12 நாள்களாகும். கொடைத் தன்மை மிகு சனிபகவான், அக்காலத்தில் நிகழ்த்தும் பலன்களாவன: புத்திரோற்பத்தி ஏற்படுதலும் இன்பம் நேர்தலும், எண்ணிய எண்ணங்கள் எண்ணிய வண்ணம் ஈடேறுதலும் நேரும். வெகு திரவியமும் பொன்னாபரணம் புத்தாடை சேர்க்கையும் ஏற்படும். எழுச்சிபெறும் அரசனைப் போல் சம்பத்தும் கனக தண்டிகையும் வாகனாதிகளும் ஏற்பட்டு வெகு பிரபலனாவான் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் வியாழன் மகாதிசையில் சனி புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment