Saturday 11 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 221 - செவ்வாய் மகாதிசை, சுக்கிர புத்திப் பலன்கள்


தானென்ற சேய் திசையில் சுக்கிரபுத்தி
தாழ்வான மாதமது பதினாலகும்
வீணென்ற அதன்பலனை வினவக்கேளு
விரகான சத்துருவால் விலங்குமுண்டாம்
யேனென்ற ஈனஸ்திரீ போக முண்டாம்
யின்பமில்லா துன்பமது யிடஞ்சல் காட்டும்
கோனென்ற இராசாவால் கலகமுண்டு
கோதண்டம் தான்வுருகும் கொடுமைபாரே.


தன்னிரகற்ற செவ்வாய் திசையில் சுக்கிர புத்தி தன்றன் பொசிப்புக் காலம் 14 மாதமாகும். இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுகிறேன். நன்கு கேட்பாயாக! மாறுபாடற்ற சத்துருக்களால் விலங்கு பூண நேரும்: மீன் போலும் கண்ணுடைய போகஸ்திரீயின் சேர்க்கை நிகழும். இன்பமில்லாத நிலையில் வெகு துன்பங்களே நிகழும். பலவகையிலும் காரியங்கள் கேடுறும். அரசபயம் உண்டாகும். ஆயுதத்தால் கேடுறும் பயம் ஏற்படும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் செவ்வாய் மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment