Saturday 11 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 212 - சந்திர மகாதிசை, கேது புத்திப் பலன்கள்


தெரிந்து நின்ற சந்திர திசை கேதுபுத்தி
தென்மையில்லா நாளதுவும் மாதம் ஏழு
புரிந்துகொண்ட இதன்பலனைப் புகலக்கேளு
புகழ்மெத்த மார்பில்சில பிணியுமுண்டாம்
பரிந்துகொண்ட பாவையரும் பகைநாசமுண்டாம்
பாங்கான தாய்தந்தை சுதன்மரணமாகும்
விரிந்து கொண்ட வியாதியது விழலாய்ப்பண்ணூம்
வீணாக தேசமெங்கும் அலைவன்பாரே.


மேலும், இச்சந்திர மகாதிசையில் கேது புத்தியானது, மிகவும் கலக்கத்தைச் செய்வதேயாகும். இக்கேதுவின் பொசிப்புக்காலம் ஏழு மாதம் என்பதையும் உணருக. இக்காலகட்டத்தில் ஏற்படும் பலன்களாவன: புகழ்தற்குரிய பெருத்த மார்பகத்தில் பிணியேற்படுதலும், இவர்களுக்காகப் பரிந்து நின்ற பெண்களுக்குப் பகைவர்களால் பெருநாசமும் விளைவதாகும். மேலும், பெற்ற தாய், தந்தை மற்றும் பிறந்த மகன் முதலியோரின் மரணமும் நேரும். அதிகப்பட்டுப்போன வியாதி பெருத்த விரயத்தை உண்டு பண்ணும். இச்சாதகன் காரணமின்றியே தேசாந்தரம் சென்றலைவான் என்று போகரது கருணையினால் புலிப்பாணி பாடினேன்.

இப்பாடலில் சந்திர மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment