Friday 10 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 208 - சந்திர மகாதிசை, இராகு புத்திப் பலன்கள்


பாரப்பா சந்திரதிசை ராகுபுத்தி
பகையான நாளதுவும் மாதம் பதினெட்டாகும்
ஆரப்பா அதனுடைய பலத்தைக்கேளு
அடங்காத சத்துருவால் தனநஷ்டமாகும்
விதியளவும் புத்திமத்தி நாசம்பண்ணும்
விளைவு தரும் பூமியுமே விரயமாகும்
காரப்பா களருடனே காலிசாவாம்
கனகமது சிலவாகும் கண்டுதேரே.


இதற்கு மேல் நான் ஒன்றையும் உனக்குச் சொல்வேன். அதையும் நீ கவனமாகக் கேட்பாயாக! சந்திர மகாதிசையில் ராகுபுத்தி பகையானதேயாகும். இச்சந்திர மகாதிசையில் ராகுவின் பொசிப்புக் காலம் பகையான தென்றாலும் நீண்ட 18 மாதங்களைக் கொண்டதாகும். இக்கால கட்டத்தில் இதற்கு ஏற்படும் சோதனையான பலன்களை நீ விவரமாகக் கேட்பாயாக! எதற்கும் அடங்காத இவர்களது சத்துருவால் இவர்களுக்கு தனநஷ்டம் ஏற்படும் என்பதையும் அறிந்து கொள்க. பல விதமான வியாதிகளும் ஏற்படும், காலம் எல்லாம் விதியானது உள்ளளவும் மந்தம் உடையதும் மத்திமமான புத்தியுள்ளதும் நாசம் செய்வதுமாக அமையும். மேலும் களத்திலுள்ள விவசாயிகளுடன் கன்று காலிகளும் மடிதல் நேரும். தங்க ஆபரணங்கள் செலவாதலும் உண்டாகும் என உணர்ந்து கிரகபலம் தன்னையும் அறிந்து கூறுக எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சந்திர மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment