Wednesday 8 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 192


போமப்பா யின்னமொரு புதுமைகேளு
பொன்னனுமே பால் மதிக்கி பத்திலோ
ஆமப்பா ஆதிசிவன் தெருவுந்தோறும்
அரகரா அய்யமெடுத் துண்டாரப்பா
ஊமப்பா உத்தமனாயிருந்த புரூரன்
உள்ளபடி யறுப்புண்டான் வினையினாலே
வேமப்பா வேந்தனுட ராசிகூற்ந்து
விளம்புவாய் புவியோர்க்கு வினையைத்தானே


மேலும் ஒரு கருத்தைக் கூறுகிறேன். கவனமுடன் கேட்பாயாக! சந்திரனுக்குப் பத்தில் கோட்சாரத்தில் குருபகவான் வரும் காலத்தில் வினைவலியால் நிகழும் பலன்கள் கொடுமையானதேயாகும். சிவ பரம்பொருள் தெருதோறும் சென்று ஐயம் ஏற்று உண்டதும் உத்தமனான புரூரவசுவின் தலையறுபட்டதும் இதனாலன்றோ? வேந்தன் என்ற குருபகவான் நின்ற ராசியினை நன்கு அறிந்து பலன் நிகழ்த்துக என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment