Wednesday 8 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 191


முட்டப்பா இன்னமொரு மொழியைக்கேளு
மூர்க்கமுள்ள வாலியுமோ சத்ருபங்கன்
கூட்டப்பா கோதண்டபாணி அம்பால்
கொற்றவனே மலைபோல் சாய்ந்தான் காளை
நாட்டப்பா ஜென்மனுக்கு நமனால் கண்டம்
நலம்தப்பும் பொருள்சேதம் அரசர்தோஷம்
வீட்டப்பா வேதியனும் மதிக்கேயெட்டில்
விளங்கவே வெகு பயமாம் விளைவுபோமே


மேலும் ஒரு கருத்தைக் கூறுகிறேன் கேட்பாயாக! இராமகாதையிலே வரும் வாலி சத்துருவை அழிப்பதில் வல்லமை வாய்ந்தவன் என்றாலும் கோதண்டத்தைக் கையில் ஏந்திய இராமனின் கருணையால் பெரிய மலை சரிந்ததைப் போல் சாய்ந்தது ஏனெனில் குரு கோட்சாரத்தில் சந்திரனுக்கு எட்டில் வந்ததாலன்றோ? இச்சாதகனுக்கு எமனால் கண்டம் ஏற்படும். சுகக்கேடு விளையும். பொருட்சேதம் ஏற்படும். அரச தோஷம் உண்டாகும் என்று கூறுக எனப் போகர் கருணையால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment