Wednesday 8 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 183


தானானயினா மொரு சேதி கேளு
தன்மையுடன் சந்திரனா மதிபனெட்டில்
வீணான தீக்கோட்கள் பலருங்கூடி
விரும்பிசட்டாட்ட மதி லிருந்தாராகில்
கோனான அசீரணத்தா லிறப்பதல்லால்
கொடுமருந்து ஈடுபயம் சோற்றாலச்சம்
தேனான போகரது தாள்வணங்கி
தெரிந்தசிறு புலிபாணி பாடினேனே.


நான் கூறும் மற்றொரு சேதியினையும் நீ மதித்துக் கேட்பாயாக! தன்மையுள்ள சந்திர இலக்கினாதிபதியானவன் எட்டில் வீண் என்று சொல்லத்தக்க தீய கோள்களுடன் கூடி அவரும் பலராக அல்லது சஷ்டாஷ்டமத்தில் விளங்கில் அச்சாதகன் அஜீரணத்தால் இறப்பான்; அச்சாதகனுக்கு மருந்தீடும் சோற்றால் அச்சமும் உண்டென்று தேன் போன்று இதம் சொல்லும் எனது சற்குருவான போகமா முனிவரது கருணா கடாசத்தால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment