Wednesday 8 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 172


காணப்பா இன்னமொரு கருத்துக்கேளு
கருமனுமோ கருமத்துக் கருமஸ்தானம்
ஊணப்பா உற்றதனம் லாபம்யேற
உத்தமனாம் நிதியுடையோன் கருமமுள்ளோன்.
தானப்பா தருமங்கள் யாகஞ்செய்வன்
தரணிதனில் கிராமங்கள் உண்டுபண்ணி
வீணப்பா போகருட கடாட்சத்தாலே
விதமான புலிப்பாணி விரித்தேன்பாரே.


இன்னொரு கருத்தினையும் உனக்குக் காணும் வண்ணம் கூறுகிறேன் அதையும் நீ நன்கு உணர்ந்து அறிவாயாக! பத்துக்குடைய கருமாதிபதி அவனுக்குப் பத்தாம் இடமான கருமஸ்தானத்த்ல் அமர அல்லது 2-ஆம் இடமான தனஸ் தானத்தையோ 11-ஆம் ஸ்தானமான லாபத்தையோ அடைய அச்சாதகன் உத்தமனாய் மிகவும் நிதியுடையவனாய் நற்கருமம் சேய்பவனாய் மங்களகரமான யாகங்கள் பலவும் புரிந்து இத்தரணியில் வெகு கிராமங்களை உண்டுபண்ணி விளக்கமுற வாழ்ந்திடுவான் என்று போகமா முனிவார் அருளால் புலிப்பாணி கூறினேன்

No comments:

Post a Comment