Tuesday 7 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 162


விளம்பிடுவேன் வெண்மதியும் யெட்டில்நிற்க
விதிகுறைவுநிதிமனையும் வித்தையுள்ளோன்
களங்கமுள்ள நீர்ப்பயமும் குளிரும்காச்சல்
கனமுள்ள தாய்தந்தைக் கரிட்டஞ்சொல்லு
தளங்கொண்ட ஆறுக்கு கழிச்சல் போக்கு
தனவிரயம் விதிகுறைவு கருமமாகும்
விளங்குகின்ற அன்னைக்கி தோஷஞ்சொல்லும்
விரையமடா விளைவுகெடும் சராருக்கே.


எல்லாராலும் புகழப்படும் சந்திரனும் 8-ஆம் இடத்தில் நிற்க, அச்சாதகனுக்கு விதிகுறைவேனும் நிதியும் மனையும் வித்தையும் உடையோனேயாவான். அச்சென்மனுக்கு நீரில் பயமும், குளிர் காய்ச்சலும் பெருமையுள்ள தாய் தந்தையருக்கு அரிஷ்டமும் (பல துன்பங்கள்) ஏற்படும். எப்போதெனில் சந்திரன் 9-ஆம் இடத்தில் நிற்கும் போது, இனி ஆறாம் இடத்தில் நிற்க கழிச்சல், வயிற்றுப் போக்கு, வாந்தி முதலியன ஏற்படும். பத்தாம் இடத்தில் நிற்க தனவிரயமும் விதிக்குறைவும் ஏற்படும். விரயம் எனப்படும்12-இல் இருக்க அன்னைக்குத் தோஷமும் விரயமும் விளைவுக் குறைச்சலும் ஏற்படும் என்று போகர் அருளாணையால் புலிப்பாணி புகன்றேன். ./

No comments:

Post a Comment