Tuesday 7 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 156



பாரப்பா யின்னமொரு புதுமைகேளு
பகருகின்ற பாம்புடனே ஒருவன்சேர
வீரப்பா விருபுறமும் மற்றோர் நிற்க
வேந்தனுக்கு வேந்தனாம் கொடியவீரன்
கூறப்பா ஜெகமதனில் கெஜமுமுள்ளோன்
கொற்றவனே துரகமதுமெத்த உண்டு
வீரப்பா வேடர்படை கொடியுள்ளோன்
விதமான புலிப்பாணி சொன்னோம்நாமே.


மேலான இன்னொரு விவரத்தையும் கூறுகிறேன் கேட்பாயாக! எல்லாராலும் கூறப்படும் பாம்புடனே ஒருவன் சேர அவருக்கு இருபுறமும் மற்றவர் நிற்க அச்சாதகன் அரசர்க்கரசனாய் விளங்குவான். மிகப் பெரிய வீரன். இந்நிலவுலகில் யானைகளையுடையவன் மேலும் குதிரைகளின் பந்தியும் மிகுதியும் உண்டு. வீரம்மிக்க வேடர்படையும் வெற்றிப்பாதையும் உடையவன் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment