Tuesday 7 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 146


செப்புவாய் குருவோடு வெள்ளிகுடில்
ஜென்மனுக்கு யோகவிதி பொன்னுள்ளோன்
அப்புவாய அந்தணனும் நீலன் கூடில்
அப்பனே புத்திரர்கள் ஈனமாகும்.
ஒப்புவாய் உதயத்தில் சனியும் பாம்பும்
உத்தமனே நோயதுவே காத்திருக்கும்
தப்புசனி புதனுதயம் தளவாய்சேர
தரணிதனில் கூனனடா தெரிந்துகொள்ளே


மேலும் ஒரு கருத்தையும் கூறுவேன் கேட்பாயாக! தேவகுருவோடு அசுரகுரு கூடினால் அச்சென்மனுக்கு யோகமே விளையும், அவன் பொன்னுள்ளவன் எனக் கூறுக. அதே போல் குருவோடு சனி கூடினால் அச்சாதகன் ஈன புத்திரர்களை அடைவான். இலக்கினத்தில் சனி பாம்புடன் கூடி நிற்க அச்சாதகனுக்கு நோயேயென்றும் காத்திருக்கும். அதேபோல் இலக்கினத்தில் புதனோடு சனி சேர இப்பூமியின் கண் அச்சாதகன் கூனன் என்பதனையும் அறிந்து தெளிவாயாக என்று போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment