Tuesday 7 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 141


ஆரடா குருபுந்தி வெய்யோன் வெள்ளி
அப்பனே நால்வர்களும் சேர்ந்துநிற்க
சீரடா சென்மனும் செம்பொன்னுள்ளோன்
திடமான போகனடா வையகத்தில்
கூறடா குருவெள்ளி ரவியும் சேயும்
கொற்றவனே சேர்ந்திருக்க குடும்பிமெத்த
வீரடா மனையுண்டு நிதியுமுண்டு
வெட்டல்களும் மெத்தவுண்டு விளம்பினேனே


இன்னமொரு கருத்தினையும் நான் உனக்குச் சொல்கிறேன். கேட்பாயாக! தேவகுருவான் வியாழனும் புதனும் சூரியனும் சுக்கிரன் தானும் இணைந்து நிற்கப் பிறந்த சாதகன் சிறப்புடையவனே யாவான். செம்பொன் இச்சென்மனுக்கு மிகவும் வாய்க்கும். திடமாக போகங்களை இப்பூமியிலே அனுபவிப்பான். இனி குருவும் சுக்கிரனும் சூரியனும் செவ்வாயும் சேர அச்சாதகன் வெகு குடும்பியாவான், செல்வாக்கும் நிதியும் உள்ளவனாவான். கண்பார்வையும் இச்சாதகனுக்கு மிகவும் உண்டாம் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment