Monday 6 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 137




பாரப்பா பவுமனும் புந்திவெள்ளி
பாங்கான யெவ்விடத்தி லமர்ந்திட்டாலும்
பாரப்பா பாலனுக்கு தேகபங்கம்
பதினெட்டு சித்தர்களும் செப்பலுற்றார்
பாரப்பா குருவோடு சேயும் வெள்ளி
பார்மன்னர் நேசனடா பாக்கியமெத்த
பாரப்பா பவுமனும் புத்திமேவ
பண்டிதனாம் பாக்கியமு முண்டுபாரே.


வேறொரு கருத்தினையும் நீ நன்கு உணர்ந்து கொள்வாயாக! செவ்வாயும் புதனும் சுக்கிரனும் அழகுற எந்த மனையில் அமர்ந்திட்டாலும் அச்செல்வனுக்கு தேகபங்கம் (அங்கஹீனம்) ஏற்படும் என்றே பதிக்னெண் சித்தர்களும் கூறினார்கள். மேலும் குருவோடு செவ்வாயும் சுக்கிரனும் கூட அச்சாதகன் பராளும் மன்னர் பாராட்டும் செல்வச் சீர் உடையவனே யாவான். அவனுக்கு நிறைந்த பாக்கியங்கள் வாய்த்தலும் உண்டாம். இனி செவ்வாயும் புதனும் கூடினால் அவன் பாக்கியம் மிகவும் உள்ள பண்டிதனேயாவான் என்று போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment