Monday 6 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 134


கேளப்பா கலைபுந்தி சனிசேய்சேர
கெட்டவனாம் துர்க்கிசதா நித்திரையுள்ளோன்
ஆளப்பா அகமில்லை தரித்திரனாவன்
அப்பனே அயன்விதியும் மெத்த உண்டு
சீளப்பா சேய்யிந்து சனிமால் வெள்ளி
சேர்ந்துநிற்க அய்யமெடுத் துண்பன்காளை
கூளப்பாக குருபார்க்க வேதையில்லை
கொற்றவனே குசலன் விதி கூறினேனே.


வேறொரு கருத்தை கேட்பாய்! சந்திரனும், புதனும், சனியும், செவ்வாயும், சேர அச்சென்மன் கெட்டவனேயாவான். அவன் சதா நித்திரை வயப்படும் சோம்பேறி. அவனுக்குச் சொந்த மனையில்லை. தரித்திராம்சம் கொண்டவனே ஆயினும் அவனுக்கு ஆயுள் அதிகம் உண்டு. மற்றும் செவ்வாய், சந்திரன், சனி, புதன், சுக்கிரன் சேர்ந்து நிற்க அச்சாதகன் பிச்சையெடுத்து உண்ணுபவனேயாவான்.எனினும் இவர்களைக் குரு பார்த்தால் இத்துன்பம் இல்லையென்பதையும் உணர்க என்பதையும் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment