Monday 6 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 133


பாரப்பா குருபுத்தி சேர்ந்துநிற்கப்
பாக்கியங்கள் கிட்டுமடா புனிதன்சேயின்
ஆரப்பா அரசகுரு புந்திசேர
அப்பனே பாடகனாம் பெரியோர்நேசம்
கூறப்பா கொடுஞ்சனியும் புந்திமேவ
கொற்றவனே கனதனவான் சத்துருயில்லை
வீரப்பா விஷபயமும் இல்லை யில்லை
வெகுதனங்க ளூள்ளவனாம் விளம்பக்கேளே


மற்றொரு கருத்தையும் நீ உன்னிப்பாக எண்ணிப்பார்க்கச் சொல்கிறேன், கேட்பாயாக! பிரகஸ்பதி என்று கூறக்குடிய குருவுடன் புதன் சேர்ந்தால், நல்ல பாக்கியங்கள் வாய்க்கப்பெற்று அச்சாதகன் புனிதன் எனப் பேர் பெறுவான். அதேபோல் அரசகுருவான சுக்கிரனுடன் புதன் சேர்ந்தால் அவன் பெரிய பாடகனாகவும், பெரியோர் நேசம் உடையவனாகவும் விளங்குவான். மேலும் அப்புதன் சனியோடு சேர்ந்தால் அச்சென்மன் கனதனவான். அவனுக்குச் சத்துரு பயமோ விஷபயமோ இல்லவே இல்லை. அவன் வெகுதனம் வாய்க்கப் பெறுபவனேயாவான் எனப் போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment