Monday 6 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 128


பாரப்பா பகலவனும் சனிசேய்பாம்பு
பகருகின்ற இக்கோள்களாறில் நிற்க
கூறப்பா குமரனையும் சத்துருகண்டால்
குவலயத்தில் புலிகண்ட பசுபோலாவர்
சீரப்பா செம்பொன்னும் சென்னாடுண்டு
செயலாக வாழ்ந்திருப்பன் விதியுந்தீர்க்கம்
ஆரப்பா அத்தலத்தோன் விழுந்து கெட்டால்
அப்பனே அரியைப்போ லிருப்பன்பாரே


இன்னமொரு கருத்தையும் கேள்! சூரியனும், சனி செவ்வாயும் பாம்பு என்று கூறப்படும் இக்கோள்கள் ஆறாம் இடத்தில் நிற்க அச்சாதகனுக்குச் பகைவர்கள் அடங்கிப் பயந்து போவார்கள். அச்சாதகனுக்கு சீரும் செம்பொன்னும் சிறந்த நாடும் உண்டு. அவற்றைப் பெற்றுப் புகழோடு வாழ்வான். அவனது ஆயுளூம் தீர்க்க முடையதேயாகும். மேலும் அந்த ஆறாம் இடத்திற்கு உடையோன் 6,8,12 ஆகிய இடத்தில் வீழ்ந்து கெட்டாலும் அச்சாதகன் ஒரு சிங்கத்தைப் போலவே இருப்பான் என்பதையும் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்

No comments:

Post a Comment