Monday 6 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 127


வீரப்பா யின்ன மொருவினையைக் கேளு
விளம்புகிறேன் நிதிகருமன் தனமும் நாலோன்
நாரப்பா நால்வர்களும் மூடமானால்
நரபதி போலிருப்பதிற்கு வகையைக்கேளு
ஆரப்பா அருக்கன்பின் புந்திசேயும்
அப்பனே அடைவாகத் தனித்திருக்க
சீரப்பாரா போகருட கடாட்சத்தாலே
சிறப்பாக மேதினியி லிருப்பராமே.


வீரம் மிக்கவனே! இன்னமொரு பொருளையும் நீ கேட்பாயாக! தனஸ்தானாதிபதியும், பத்துக்குடையவனும், தனகாரகனும் வாகன ஸ்தானாதிபதியான நான்கிற்குடையவனும் 6,8,12 ஆகிய இடங்களில் நின்று பலமிழப்பினும் அச்சாதகன் சுகித்திருப்பான் என்பதற்குரிய காரணத்தைச் சொல்கிறேன் கேள்! அச்சாதகன் பூலோகத்தில் உள்ள மக்களுக்கு அதிகாரியாவான். எவ்வாறெனில் சூரியனுக்குப் பின் புதனும் செவ்வாயும் அடைவுடன் தனியாக இருப்பதே அதன் காரணம் என்று போகமா முனிவரின் பேரருட்கருணையால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment