Sunday 5 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 116


கண்ணப்பா யின்னமொரு கருத்தைக்கேளூ
கனத்ததொரு லாபத்தில் நிதியில் தோன்ற
உண்ணப்பர் உயர்நீதியோன் நிதியில்தோன்ற
உத்தமனாந் தண்டிகையும் துரகமுள்ளோன்
பண்ணப்பா புதை பொருளும் கிட்டுங்கிட்டும்
பலமான வித்தையடா யிருக்கும்பாரு
திண்ணப்பா போகருட கடாட்சத்தாலே
திடமான புலிப்பாணி சாற்றினேனே.


நான் உனக்குக் கூறும் மற்றொரு கருத்தினையும் நீ கேட்பாயாக! முன்சொன்ன மூவர் பதினொன்றாம் இடமான இலாபஸ்தானத்திலும் இரண்டாம் இடமான தனஸ்தானத்திலும் நின்ற பலன்களாவன: குருபகவான் நிதியில் தோன்ற அச்சாதகன் உத்தமன். பலவிதப் படைக் கலன்களும் குதிரைகளும் உடையவன். அவனுக்குப் புதையல் தனமும் பலமான வித்தையும் கிட்டும். இதனையும் போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment