Sunday 5 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 104


குறித்திட்டே னின்ன மொன்று கூறக்கேளு
குற்றமுள்ளோர் நான்கதனி லமைந்தவாறும்
அரித்திட்டே னத்தலத்தோன் கேந்திரிக்க
அமடுவந்து தீருமடா அகமுமுள்ளோன்
சிரித்திட்டேன் ஜென்மனுக்கு வாகனங்களுண்டு
சிறப்பாக மேதினியில் நலமாய் வாழ்வன்
பரித்திட்டேன் பெற்றவட்கு ரோகஞ்சொன்னேன்
பரமகுரு பதியமர யோகந்தானே


நான் இன்னுமொன்றையும் குறித்துச் சொல்கிறேன் நன்கு கேட்பாயாக! தீய கோள்கள் நான்கில் அமைந்த முறையும் அந்த நான்காம் தலத்திற்கு உரியவன் கேந்திரத்திலிருப்பின் அதாவது 1,4,7,10 ஆகிய இடங்களில் இருக்க துன்பம் வந்து தீரும் என்பது சுருதி முடிவாகும். ஆயினும் நல்லமனை அவனுக்கு வாய்க்கும்; வாகன வசதியுடையவன். இந்நிலவுலகில் மேலான பெருமையுடன் வாழ்வான். ஆயினும் பெற்றோருக்கு வியாதியும் உண்டு என்பதை போகமா முனிவரின் பேரருளால் நான் கூறினேன் என்று புலிப்பாணி குறிப்பிடுவதோடு இலக்கினாதிபதி குருவுடன் சேர நன்றாம் என்று கூறுகிறார்.

No comments:

Post a Comment