Sunday 5 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 103


பாடினே னின்னமொரு புதுமைகேளு
பலமான செவ்வாயும் துதியில் நிற்க
கூடினேன் கிரகத்தில் வழக்கும் போரும்
குமரியவள் கணவனையும் கருதிப்பாராள்
தேடினேன் தையலுமோ மாண்டாளானால்
தனம்விரயம் சஞ்சலமும் அழுதுமாய்வன்
ஆடினேன் ஆடவர்கள் அழுதகூலி
அவல்கடலை அவர்மடியில் போடுவாரே.


நான் கூறுகின்ற இன்னொரு புதுமையும், நீ கேட்பாயாக! ஸ்தான பலமிக்க செவ்வாய் இரண்டாம் இடத்தில் நிற்க அச்சாதகனின் மனையில் அனுதினமும் போர் நிகழும். காரணம் மனைவி அவனைக் கருதிப் பாராதவளாக இருப்பாள். ஆயினும் அவள் மடிந்தாளேயானால் தனம் விரயமாதலும், மனோ வியாகூலமும், அடைந்து அழுகையினால் அச்சாதகன் மாய்வான் என்றே கூறுவேன். ஆடவர்கள் அழுத கூலிக்காக அவலையும் கடலையையும் அவர்தம் மடியில் போடுவார் என்று போகர் அருளாணைப்படி புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment