Thursday 16 August 2012

பிருகு நந்தி நாடி & சப்த ரிஷி நாடி - பதிவு 2


விதி 2 : ஒரே ராசியில் உள்ள கிரகங்களை சேர்க்கை பெற்ற கிரகங்களாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேற்படி உதாரண ஜாதகத்தில் மேஷத்தில் சூரியன் சுக்கிரனுடன் இணைவு பெற்றதாக கருத வேண்டும். அதே சமயம் சூரியன் சுக்கிரனோடு ஒரே ராசியில் இணைவு பெற்றிருந்தாலும் சூரியனுடைய பாதிப்பு சுக்கிரனுக்கு முழுமையாக இருக்காது.

சுக்கிரனுடைய பாதிப்புதான் சூரியனுக்கு முழுமையாக இருக்கும்.

காரணம் : சூரியன் சுக்கிரனை நோக்கி நகர்கிறது. சுக்கிரன் சூரியனிலிருந்து விலகிச் செல்கிறது.

கண்ணியில் ராகு சந்திரன் இரண்டு கிரகங்களும் ஒன்றுக்கொன்று இணைவு பெறுகிறது

காரணம் : ராகு ராசி சக்கரத்தில் எதிர் திசையில் சுற்ற்க்கூடியது. எனவே சந்திரன் ராகுவை நோக்கியும், ராகு சந்திரனை நோக்கியும் நகர்வதால் ஒன்றையொன்று இணைகிறது.

மீனத்தில் கேதுவும் புதனும் ஒரே ராசியில் இருந்தாலும் இணைவு பெற்றதாகக் கருத முடியாது.

காரணம் : கேது மகரத்தை நோக்கியும் புதன் மேஷத்தை நோக்கியும் செல்கின்றனர். ஒருவரையருவர் விலகிச் செல்கின்றனர். (ஆனால் இதற்கும் பலன் உண்டு பலன் பற்றி பிறகு பார்ப்போம்.)

1 comment: