Saturday 18 August 2012

பிருகு நந்தி நாடி & சப்த ரிஷி நாடி- பலன்கள் - பதிவு 13


அனைவருக்கும் வணக்கம்.

திரு விமல் கண்ணன் அவர்கள் 30/01-10-2000 அன்று நள்ளிரவு 00-00 மணிக்கு துவங்கப்பட்ட பி.எஸ்.ஏன்.எல் நிறுவனம் தற்போது மிகவும் நலிவடைந்து இருப்பதாகவும், அந்நிறுவனம் பொருளாதார மேம்பாடு அடையுமா? என்று ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார்.

மேற்படி தேதி, நேரத்திற்கான ஜாதகம் கீழ்க்கண்டவாறு அமைந்திருக்கிறது.

Image

மேற்கு ராசிகளில் உள்ள கிரகங்கள் – புதன், சுக்கிரன், சந்திரன், ராகு

இந்த அமைப்பில் சந்திரன், சுக்கிரன் ராகு இருவருக்கும் இடையில் இருக்கிறார்.சுக்கிரன் ராகு இருவரும் சந்திரனுக்கு பகை. எனவே சந்திரன் பாபகர்த்தாரியில் இருக்கிறார்.

சப்த ரிஷி நாடி விதிப்படி 2 ம் அதிபதி (தன ஸ்தானாதிபதி) சந்திரன் பாபகர்த்தாரியினால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்

மேற்கு ராசி கிரகங்கள் அனைத்தையும் மிதுனத்தில் வைத்து பார்க்கும்போது ரிஷபத்தில் உள்ள குரு மேற்படி பாபகர்த்தாரியின் பலத்தை சற்று குறைத்திருக்கிறார்

லாபாதிபதி செவ்வாய் அதற்கு 5 ல் உள்ள கேதுவால் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கிறார். லாபாதிபதி செவ்வாயாக இருப்பதால் கடன் தொல்லையால் சிரமப்படும் நிலையை ஏற்படுத்தும்.

மேலும் லக்கினாதிபதி புதனை அடுத்துள கிரகங்கள் சுக்கிரன், சந்திரன், ராகு ஆகிய மூவரும் சரியில்லாத நிலையில் இருக்கிறார்கள்.

மேலும் லக்கினம் குருவின் நட்சத்திரத்தில் இருக்கிறது. குரு ராகுவை நோக்கி செல்கிறார். இதுவும் மோசமான நிலையை காட்டுகிறது.

தற்போது கோட்சார கிரகநிலையும் அவ்வளவு சரியாக இல்லை.

இந்த நிலை தற்போது கோட்சார குரு, ரிஷபத்தில் கோட்சார கேதுவை கடந்து செல்லும் வரை நீடிக்கும்.


இந்தக் கேள்வி பதிவு செய்யப்பட்ட தேதி நேரம் 17-122011 / 11-31 amAM.

இதற்கான பிரசன்ன ஜாதகம் கீழ்க்கண்டவாறு அமைகிறது.

Image

மேற்படி ஜாதகத்தில் கிழக்கு ராசிகளில் சூரியன், குரு, சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் இருக்கின்றனர். இவர்களில் குரு தனக்கு இரண்டி உள்ள கேதுவால் பாதிக்கபட்டிருக்கிறார்.
சப்தரிஷி நாடிவிதிப்படி லக்கினாதிபதி சனிக்கு எதிர் திசையில் உள்ள சூரியன், குரு, சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்களில் சூரியன், சந்திரன், செவ்வாய் இம்மூவரும் பகை கிரகங்கள். குரு ஒருவரே நட்பு. அவரும் கேதுவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். சனியும் தனக்கு இரண்டில் உள்ள ராகுவால் பாதிக்கப் பட்டிருந்தாலும் ராகுவுகும் சனிக்கும் இடையில் புதன் இருக்கிறார். இருந்தாலும் புதன் ராகுவால் பாதிக்கப் பட்டுள்ளார்.

2, 11 க்கு உரிய அதாவது தனச்தானம், இலாபஸ்தானம் ஆகிய இரண்டுக்கும் அதிபதியாக உள்ள குரு - சூரியன் சந்திரன், செவ்வாய் ஆகியவர்களால் பாதிக்கப் பட்டிருக்கிறார். சூரியன் நட்பு, சந்திரன் பகை, செவ்வாய் நட்பு.

சந்திரனின் சம்மந்தமும் செவ்வாயின் சம்மந்தமும் கடனால் அவமானப்படும் சூழ்நிலையும், சூரியன் சம்மந்தம் ஓரளவுக்கு ஆறுதலான சூழ்நிலையும் ஏற்படுவதை காட்டுகிறது. குருவுக்கு எதிர் திசையில் உள்ள சனியும் ஆறுதலை தருகிறார்.

தற்கால கோட்சார குரு, கோட்சார கேதுவை கடக்கும்வரை சிக்கல் இருக்கவே செய்யும்.

No comments:

Post a Comment